கடாரம் கொண்டான் படத்துக்கு மலேசியாவில் தடை!

news18
Updated: July 22, 2019, 8:12 PM IST
கடாரம் கொண்டான் படத்துக்கு மலேசியாவில் தடை!
கடாரம் கொண்டான்
news18
Updated: July 22, 2019, 8:12 PM IST
கடாரம் கொண்டான் படத்துக்கு மலேசியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தூங்காவனம் படத்தின் இயக்குநர் ராஜேஷ் செல்வா இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்துள்ள படம் கடாரம் கொண்டான். இந்தப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் கமல்ஹாசனின் மகள் அக்‌ஷராஹாசன் நடித்துள்ளார். மேலும் நாசர் மகன் அபி மெஹ்தி ஹாசன், பிக்பாஸ் புகழ் மீராமிதுன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்

கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் மற்றும் ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான இந்தப் படம் 19-ம் தேதி வெளியானது. ரசிகர்களிடையே கலவையான விமரசனங்களைப் பெற்று வரும் இந்தப் படம் மலேசியாவில் தடை செய்யப்பட்டுள்ளது.


காரணம், மலேசிய போலீசாரையும் குடிமக்களையும் கடாரம் கொண்டான் மோசமாக சித்தரித்துள்ளதால் இந்தப் படத்தை வெளியிடத் தடை போட்டுள்ளது மலேசிய அரசு. கடாரம் கொண்டான் படம் முழுக்க மலேசியாவில் படமாக்கப்பட்டிருக்கும் நிலையில் அங்கு ரிலீஸ் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் படத்தின் வசூல் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.

வீடியோ பார்க்க: மலையாள நாயகிகளை தேடிப்பிடிக்கும் தனுஷ்!

First published: July 22, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...