Home /News /entertainment /

இரண்டு பாகங்களாக வெளியாகும் விக்ரமின் துருவ நட்சத்திரம்...?

இரண்டு பாகங்களாக வெளியாகும் விக்ரமின் துருவ நட்சத்திரம்...?

விக்ரம்

விக்ரம்

Vikram: விக்ரமுடன் ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிம்ரன், பார்த்திபன், சரத்குமார், திவ்யதர்ஷினி, முன்னா சைமன், சதீஷ் கிருஷ்ணா, வம்சி கிருஷ்ணா ஆகியோரும் நடித்துள்ளனர்.

  • News18
  • Last Updated :
பல வருடங்களாக தயாரிப்பில் இருக்கும் விக்ரமின் துருவ நட்சத்திரம் திரைப்படம் அனேகமாக இரண்டு பாகங்களாக வெளியாகலாம் என கூறப்படுகிறது.

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் துருவ நட்சத்திரம் என்ற படம் தொடங்கப்பட்டது நினைவிருக்கலாம். முழு ஸ்கிரிப்ட்டை கொண்டு வாங்க ஷூட்டிங் போகலாம் என சூர்யா சொல்ல, கடைசிவரை முழு ஸ்கிரிப்டை கெளதம் சூர்யாவிடம் தரவில்லை. காரணம் வேறொன்றுமில்லை. எப்போதுமே ஒரு லைனை வைத்துக்கொண்டு அரைகுறையாக திரைக்கதை எழுதி படப்பிடிப்புக்கு செல்வது கௌதம் வாசுதேவ் மேனனின் வழக்கம்.

கொஞ்சம் கொஞ்சமாக படத்தை எடுத்தபடி அதற்கு அடுத்து வரும் காட்சிகளை தீர்மானிப்பது அவரது ஸ்டைல். ஆனால் இந்த முறை முழு ஸ்கிரிப்ட் இருந்தால் மட்டுமே படப்பிடிப்பு என சூர்யா கறாராக கூறியதால் படம் கைவிடப்பட்டது. நான் இதுவரை இப்படித்தான் படமெடுத்தேன். இனியும் இப்படித்தான் எடுப்பேன் என விக்ரமை வைத்து துருவ நட்சத்திரம் படத்தை ஆரம்பித்தார் கெளதம்.

இதன் படப்பிடிப்பு பல வருடங்கள் நடந்து ஒருவழியாக முடிவுக்கு வந்தது. மொத்தம் ஏழு நாடுகளில் இதன் படப்பிடிப்பை கௌதம் வாசுதேவ் மேனன் நடத்தினார். விக்ரமுடன் ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிம்ரன், பார்த்திபன், சரத்குமார், திவ்யதர்ஷினி, முன்னா சைமன், சதீஷ் கிருஷ்ணா, வம்சி கிருஷ்ணா ஆகியோரும் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் டப்பிங் வேலைகளை விக்ரம் தொடங்கியிருக்கிறார். விரைவில் அவர் தான் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கான டப்பிங்கை பேசி முடிக்க உள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் படத்திற்கு இசை.

Also read... சில நேரங்களில் சில மனிதர்கள் படக்குழுவை பாராட்டிய கமல் - படங்கள்!
வழக்கம் போல மனதில் தோன்றுகிற அனைத்து காட்சிகளையும் எடுத்ததால் துருவ நட்சத்திரம் ஃபுட்டேஜ் ஏறக்குறைய நாலரை மணி நேரம் வருகிறது. இதில் எதை தூக்குவது எதை வைப்பது என்ற நீண்ட குழப்பத்துக்கு பிறகு இரண்டு பாகங்களாக படத்தை வெளியிட்டால் என்ன என்ற யோசனை கௌதமுக்கு தோன்றி இருக்கிறது. அதனால் துருவ நட்சத்திரம் இரு பாகங்களாக வெளியாக அதிக வாய்ப்புள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor Vikram

அடுத்த செய்தி