விக்ரமுடன் நடிக்க வேண்டுமா நீங்கள்?... இதோ ஓர் அரிய வாய்ப்பு!

news18
Updated: July 10, 2019, 12:39 PM IST
விக்ரமுடன் நடிக்க வேண்டுமா நீங்கள்?... இதோ ஓர் அரிய வாய்ப்பு!
விக்ரம்
news18
Updated: July 10, 2019, 12:39 PM IST
விக்ரம் படத்தில் நடிக்க ஆர்வமுள்ளவர்களுக்காக செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் மற்றும் வயாகாம் நிறுவனம் இணைந்து புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் மற்றும் ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் ராஜேஷ் செல்வா இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள கடாரம் கொண்டான் திரைப்படம் ஜூலை 19-ம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

இந்தப் படத்தை அடுத்து இமைக்கா நொடிகள் பட இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் விக்ரம். இந்தப் படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் துவங்கி நடைபெற்று வருகின்றன. விக்ரமின் 58-வது படமாக உருவாகும் இந்தப் படத்தில் சில புதுமுகங்களை அறிமுகம் செய்யவும் படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் படத்தைத் தயாரிக்கும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் மற்றும் வயாகாம் நிறுவனங்கள் தங்களது ட்விட்டர் பக்கத்தில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், நடிக்க விரும்பும், நடிப்பில் ஆர்வமுள்ள ஆண்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என அனைத்து வயதினர்களும் இமெயில் மூலம் புகைப்படங்களையும், நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் வீடியோக்களையும் அனுப்புமாறு கூறப்பட்டுள்ளது.வீடியோ பார்க்க: புலி படத்தை திட்டியவரை பார்ட்டி கொடுத்து பாராட்டினாரா விஜய்?

First published: July 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...