ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

vikram : கோப்ரா பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்கிறார் நடிகர் விக்ரம்!

vikram : கோப்ரா பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்கிறார் நடிகர் விக்ரம்!

நடிகர் விக்ரம்

நடிகர் விக்ரம்

Chiyaan Vikram : நடிகர் விக்ரமிற்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என செய்திகள் வெளியாகின

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

கோப்ரா பாடல் வெளியீட்டு விழாவில் நடிகர் விக்ரம் கலந்து கொள்வார் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருக்கிறது.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் லலித்குமார் தயாரிப்பில் விக்ரம் நடித்திருக்கும் திரைப்படம் கோப்ரா.  இந்த திரைப்படம் ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியாகவுள்ளது.  கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட படப்பிடிப்பு சில மாதங்காகளுக்கு முன்பு முடிவடைந்து, இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வந்தன.  இந்த நிலையில் படத்தை வெளியிடுவதற்கான வேலைகளில் தயாரிப்பாளர் லலித் மற்றும் இயக்குனர் அஜய் ஞானமுத்து ஆகியோர் இறங்கி உள்ளனர்.

இதையும் படிங்க.. 7 நாட்கள் கல்யாணத்தை நடத்திய குக் வித் கோமாளி பிரபலம்!

அதில் முதல்கட்டமாக படத்தின் மூன்று பாடல்களை சிங்கிள் ட்ராக் முறையில் சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவான அந்த பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில் கோப்ரா படத்தின் அனைத்து பாடல்களையும் வரும் 11ம் தேதி சென்னையில் உள்ள ஒரு பிரபல மாலில் வெளியிட உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருக்கிறது.

நடிகர் விக்ரம் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதி

அத்துடன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நடிகர் விக்ரம் அந்த விழாவில் பங்கேற்பார் எனவும் தெரிவித்திருக்கிறார்கள். நடிகர் விக்ரமிற்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என செய்திகள் வெளியாகின. ஆனால் லேசான நெஞ்சுவலி காரணமாகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

ஓரிரு நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என அவரின் மேலாளர் சூரிய நாராயணன் தெரிவித்திருந்தார்.  இந்த நிலையில் கோப்ரா படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் விக்ரம் கலந்து கொள்வார் என அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது அவரது ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும் அந்த விழாவில் ஏ.ஆர்.ரகுமான், உதயநிதி ஸ்டாலின், இயக்குநர் அஜய் ஞானமுத்து உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொள்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Vikram, Kollywood, Tamil Cinema