விக்ரம் வேதா இந்தி ரீமேக் - அமீர்கான் நடிக்க மறுத்தது ஏன்?

விக்ரம் வேதா இந்தி ரீமேக் - அமீர்கான் நடிக்க மறுத்தது ஏன்?

அமீர் கான்

விக்ரம் வேதா படத்தை இந்தியில் ரீமேக் செய்கிறார்கள். இதில் ரித்திக் ரோஷன், சயிப் அலிகான் நடிக்கின்றனர். இந்த ரீமேக்கில் முதலில் நடிப்பதாக இருந்தவர் நடிகர் அமீர்கான்.

 • Share this:
  விக்ரம் வேதா படத்தை இந்தியில் ரீமேக் செய்கிறார்கள். இதில் ரித்திக் ரோஷன், சயிப் அலிகான் நடிக்கின்றனர். இந்த ரீமேக்கில் முதலில் நடிப்பதாக இருந்தவர் நடிகர் அமீர்கான். இந்தியாவைத் தாண்டி சீனாவிலும் விக்ரம் வேதா வாகைசூட வேண்டும் என்று அவர் விரும்பியது தான், அவர் இதில் நடிக்காமல் போனதற்கு காரணம் என்றால் நம்ப முடிகிறதா?

  விக்ரம் வேதா 2017-ல் புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் வெளியானது. விஜய் சேதுபதி, மாதவன் இருவரது நடிப்பும், சாம் சி.எஸ்.ஸின் இசையும், கதை சொல்லப்பட்டவிதமும் படத்துக்கு மிகப்பெரிய வெற்றியை தந்தது. அப்போதே இந்தியில் இதனை ரீமேக் செய்ய தயாரிப்பாளர்கள் விருப்பம் தெரிவித்தனர். இயக்கம் அதே புஷ்கர் - காயத்ரி. விக்ரம் வேதாவின் இந்தி ரீமேக்கில் நடிக்க அமீர்கானும் ஒத்துக் கொண்டார்.

  அமீர்கானின் பிகே, சீக்ரெட் சூப்பர்ஸ்டார் உள்ளிட்ட படங்கள் சீனாவில் வசூலில் பட்டையை கிளப்பியதால், விக்ரம் வேதாவையும் சீனாவில் வெளியிட அவர் விரும்பினார். சீன ரசிகர்களை கவர, வடசென்னையில் எடுக்கப்பட்ட விக்ரம் வேதாவின் கதையை ஹாங்காங்குக்கு மாற்றச் சொன்னார். ஹாங்காங் பின்னணி என்றால், அதிக சீன ரசிகர்களை கவர முடியும் என்பது அவரது கணிப்பு.

  புஷ்கர் - காயத்ரி அமீர்கான் விருப்பத்துக்கு ஏற்ப கதைக்களத்தை மாற்றினர். அந்த நேரம் தான் வூகானில் கொரோனா தொற்று பரவி, நாடுகளுக்கிடையிலான எல்லைகள் சீல் வைக்கப்பட்டன. ஹாங்காங் திட்டம் நிறைவேறவில்லை. ஹாங்காங் இல்லையென்றால் விக்ரம் வேதாவும் வேண்டாம் என்று படத்திலிருந்து விலகினார் அமீர்கான்.

  இப்போது மாதவன் நடித்த விக்ரம் வேடத்தில் சயிப் அலிகானும், விஜய் சேதுபதி நடித்த வேதா வேடத்தில் ரித்திக் ரோஷனும் நடிக்க உள்ளனர். இதில் இன்னொரு முக்கிய அம்சம், அமீர்கானுக்கு முன்பு தயாரிப்பு தரப்பு அணுகியது ரித்திக் ரோஷனை தான். அப்போது அவர் பிஸியாக நடித்துக் கொண்டிருந்ததால் கால்ஷீட் தர இயலாமல் போனது. கொரோனா ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளால் இப்போது ரித்திக் ரோஷன் ஓய்வாக இருக்கிறார். அதனால், உடனே கால்ஷீட் தந்திருக்கிறார்.

  கொரோனாவால் விக்ரம் வேதா ரீமேக்கில் அமீர்கானால் நடிக்க முடியவில்லை, அதே கொரோனாவால் ரித்திக் ரோஷன் நடிக்கிறார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: