Home /News /entertainment /

விக்ரம் வேதா ஹிந்தி ரீமேக் ட்ரெய்லர் வெளியாகும் தேதி அறிவிப்பு…

விக்ரம் வேதா ஹிந்தி ரீமேக் ட்ரெய்லர் வெளியாகும் தேதி அறிவிப்பு…

விக்ரம் வேதா போஸ்டர்

விக்ரம் வேதா போஸ்டர்

விக்ரம் வேதா ட்ரெய்லர் ஹாஷ்டேக் சமூகவலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. இந்த படத்தை வரும் 30ஆம் தேதி வெளியிடுவதற்கு படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    விக்ரம் வேதா ஹிந்தி ரீமேக்கின் ட்ரெய்லர் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

    புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் விஜய்சேதுபதி, மாதவன் நடிப்பில் உருவான விக்ரம் வேதா திரைப்படம் கடந்த 2017 ஜூலை 21ஆம் தேதி வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது.

    இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், ஷ்ரத்தா ஸ்ரீநாத், கதிர் உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர். சாம் சி.எஸ். இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார்.

    சுமார் 11 கோடி ரூபாய் செலவில் உருவான இந்த திரைப்படம், ரூ. 60 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இந்த படத்தின் திரைக்கதை மிகப்பெரிய அளவில் பாராட்டைப் பெற்றது. இதைத்தொடர்ந்து இந்தியில் விக்ரம் வேதா ரீமேக் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு, அதில் மாதவன் கேரக்டரில் சைஃப் அலி கானும், விஜய்சேதுபதி கேரக்டரில் ஹ்ரித்திக் ரோஷன் நடிப்பார்கள் என அறிவிப்பு வெளியானது.

    அடுத்த படத்தில் போலீஸ் கேரக்டரில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்…

    படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முற்றிலும் நிறைவுற்று, சமீபத்தில் டீசர் வெளியிடப்பட்டது. இந்தி ரீமேக்கையும் புஷ்கர் - காயத்ரி ஆகியோர் இயக்கியுள்ளனர். டீசருக்கு மிகப்பெரும் வரவேற்பு கிடைத்த நிலையில் அடுத்ததாக படத்தின் ட்ரெய்லர் வரும் 8-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



    தற்போது விக்ரம் வேதா ட்ரெய்லர் ஹாஷ்டேக் சமூகவலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

    விவாகரத்து, சக நடிகருடன் நெருக்கம், தயாரிப்பாளருடன் இரண்டாவது திருமணம் - சீரியல் நடிகை மகாலட்சுமி ஆல்பம்!

    இந்த படத்தை வரும் 30ஆம் தேதி வெளியிடுவதற்கு படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். சுமார் 175 கோடி ரூபாய் செலவில் விக்ரம் வேதா திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
    Published by:Musthak
    First published:

    Tags: Bollywood

    அடுத்த செய்தி