Home /News /entertainment /

வரவேற்பை பெறும் விக்ரம் வேதா இந்தி ரீமேக் ட்ரெய்லர்… 24 மணி நேரத்தில் 42 மில்லியன் வியூசை தாண்டியது

வரவேற்பை பெறும் விக்ரம் வேதா இந்தி ரீமேக் ட்ரெய்லர்… 24 மணி நேரத்தில் 42 மில்லியன் வியூசை தாண்டியது

விக்ரம் வேதா படத்தில் சைஃப் அலி கான் - ஹிருத்திக் ரோஷன்

விக்ரம் வேதா படத்தில் சைஃப் அலி கான் - ஹிருத்திக் ரோஷன்

விக்ரம் வேதா படத்தை வரும் 30ஆம் தேதி வெளியிடுவதற்கு படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். சுமார் 175 கோடி ரூபாய் செலவில் விக்ரம் வேதா திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    நேற்று வெளியான விக்ரம் வேதா இந்தி ரீமேக்கின் ட்ரெய்லருக்கு மிகப்பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. ட்ரெய்லர் வெளியான 24 மணி நேரத்தில் 42 மில்லியன் வியூசை கடந்துள்ளது.

    புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் விஜய்சேதுபதி, மாதவன் நடிப்பில் உருவான விக்ரம் வேதா திரைப்படம் கடந்த 2017 ஜூலை 21ஆம் தேதி வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது.

    இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், ஷ்ரத்தா ஸ்ரீநாத், கதிர் உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர். சாம் சி.எஸ். இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார்.

    சுமார் 11 கோடி ரூபாய் செலவில் உருவான இந்த திரைப்படம், ரூ. 60 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இந்த படத்தின் திரைக்கதை மிகப்பெரிய அளவில் பாராட்டைப் பெற்றது.

    பிரபல இசையமைப்பாளருடன் ரகசிய திருமணமா? இளம் நடிகை பூஜிதா மறுப்பு

    இதைத்தொடர்ந்து இந்தியில் விக்ரம் வேதா ரீமேக் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு, அதில் மாதவன் கேரக்டரில் சைஃப் அலி கானும், விஜய்சேதுபதி கேரக்டரில் ஹ்ரித்திக் ரோஷன் நடிப்பார்கள் என அறிவிப்பு வெளியானதால், எதிர்பார்ப்பு அதிகம் காணப்பட்டது.

    படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முற்றிலும் நிறைவுற்று, சமீபத்தில் டீசர் வெளியிடப்பட்டது. இந்தி ரீமேக்கையும் புஷ்கர் - காயத்ரி ஆகியோர் இயக்கியுள்ளனர். டீசருக்கு மிகப்பெரும் வரவேற்பு கிடைத்த நிலையில் அடுத்ததாக படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியாகி யூடியூபில் சாதனை படைத்து வருகிறது.

    ட்ரெய்லர் வெளியான 24 மணி நேரத்தில் 42 மில்லியன் வியூசை கடந்திருக்கிறது 9.11 லட்சம்பேர் இதனை லைக் செய்திருக்கிறார்கள்.



    24 மணி நேரத்தில் மிக அதிகமாக பார்க்கப்பட்ட 4வது இந்தி படம் என்ற சாதனையை விக்ரம் வேதா இந்தி ட்ரெய்லர் ஏற்படுத்தியுள்ளது.

    Mahalakshmi Ravindar: மகாலட்சுமி ரவீந்தர் சந்திரசேகரன் ஜோடியின் ரொமாண்டிக் படங்கள்!

    இந்த படத்தை வரும் 30ஆம் தேதி வெளியிடுவதற்கு படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். சுமார் 175 கோடி ரூபாய் செலவில் விக்ரம் வேதா திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

    விக்ரம் வேதா ஓடிடி ரிலீசை Voot Select நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இது விக்ரம் வேதா தயாரிப்பு நிறுவனமான வயாகாம் 18-ன் நிறுவனங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Musthak
    First published:

    Tags: Bollywood

    அடுத்த செய்தி