விக்ரம் வேதா தெலுங்கு ரீமேக் - தயாரிப்பு நிறுவனம் விளக்கம்

விறுவிறுப்பான திரைக்கதையாலும் , நேர்த்தியான நடிப்பாலும் விக்ரம் வேதா திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது

news18
Updated: March 23, 2019, 10:22 PM IST
விக்ரம் வேதா தெலுங்கு ரீமேக் - தயாரிப்பு நிறுவனம் விளக்கம்
நடிகர் விஜய் சேதுபதி
news18
Updated: March 23, 2019, 10:22 PM IST
விக்ரம் வேதா படத்தின் தெலுங்கு ரீமேக் குறித்து அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஒய் நாட் ஸ்டுடியோஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

புஷ்கர் -காயத்ரி இயக்கத்தில் மாதவன் போலீஸ் அதிகாரியாகவும் , விஜய்சேதுபதி கேங்க்ஸ்டராகவும் நடித்திருந்த படம் விக்ரம் வேதா. இந்தப் படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் கதாநாயகியாக நடித்திருந்தார்.

விறுவிறுப்பான திரைக்கதையாலும் , நேர்த்தியான நடிப்பாலும் இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் ட்ரெய்லரை ஷாரூக் கான் வெளியிட்டதால் இந்தியிலும் கவனம் பெற்றது.

எப்போதுமே வெற்றி பெற்ற படங்களின் உரிமைகளைக் கைப்பற்றி மற்ற மொழிகளில் தயாரிக்க தயாரிப்பாளர்கள் ஆரவம் காட்டுவர். இந்தப் படத்தை புஷ்கர் - காயத்ரி இணைந்து இந்தியில் இயக்குவதாக இருந்தது. ஆனால் அதுகுறித்த அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.

சமீபத்தில் இந்தப் படம் தெலுங்கில் ரீமேக் ஆவதாக செய்திகள் வெளியாகின. அதேபோல் தெலுங்கு ரீமேக்கில், நந்தமுரி பாலகிருஷ்ணாவும், டாக்டர் ராஜசேகரும் இணைந்து நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் பரவிவருகின்றன. இதை தயாரிப்பு நிறுவனம் முழுதாக மறுத்துள்ளது.இது குறித்து விளக்கமளித்திருக்கும் ஒய் நாட் ஸ்டூடியோஸ், “விக்ரம் வேதாவின் தெலுங்கு ரீமேக் தொடர்பாக வெளியாகும் செய்திகள் உண்மையில்லை. ரீமேக் உரிமைகள் எங்களிடம் தான் உள்ளன. நாங்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கும் வரை மற்ற தகவல்களை புறக்கணியுங்கள்” என்று கூறியுள்ளது.

என்னை போல் டூப்பை வைத்து எடுத்த படம் அக்னிதேவி - நடிகர் பாபி சிம்ஹா பேட்டி

First published: March 23, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...