முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / தெலுங்கில் 'அந்நியன்' விக்ரம் போல 3 விதமாக பேசி மிரட்டிய மறைந்த டப்பிங் கலைஞர் - வீடியோ பகிர்ந்து விக்ரம் உருக்கம்!

தெலுங்கில் 'அந்நியன்' விக்ரம் போல 3 விதமாக பேசி மிரட்டிய மறைந்த டப்பிங் கலைஞர் - வீடியோ பகிர்ந்து விக்ரம் உருக்கம்!

ஸ்ரீநிவாசமூர்த்தி - விக்ரம்

ஸ்ரீநிவாசமூர்த்தி - விக்ரம்

தெலுங்கிலும் விக்ரமின் நடிப்புக்கு நியாயம் சேர்க்கும் விதமாக 3 விதமாக குரல் கொடுத்திருப்பார் ஸ்ரீநிவாசமூர்த்தி.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ் படங்களுக்கு தமிழ்நாட்டைப் போலவே தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளிலும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. குறிப்பாக தெலுங்கில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி, விஜய் போன்றோரின் படங்களை அவர்கள் தங்கள் மாநில நடிகர்களின் படங்களுக்கு இணையாக ரசிகர்கள் வரவேற்பு அளித்துவருகின்றனர். ஆனால் மற்ற மொழி படங்களுக்கு தமிழ்நாட்டில் வரவேற்பு குறைவாகவே இருந்துவருகிறது.

ரஜினி, கமல், விஜய், சூர்யா, கார்த்தி ஆகியோரின் படங்களுக்கு தமிழில் எந்த அளவுக்கு வரவேற்பு இருக்குமோ அதற்கு இணையாக ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் வரவேற்பு இருந்துவருகிறது. இந்த நிலையில் தெலுங்கில் சூர்யா, விக்ரம் போன்ற நடிகர்களுக்கு ஸ்ரீநிவாச மூர்த்தி டப்பிங் பேசிவந்தார். மலையாளத்திலிருந்து தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்ட படங்களில் மோகன்லால் மற்றும் ஜெயராம் ஆகியோருக்கு ஸ்நிவாசமூர்த்திதான் குரல்கொடுத்துவந்தார்.

அஜித்தின் விஸ்வாசம் படத்துக்கும் தெலுங்கில் இவர்தான் குரல் கொடுத்திருந்தார். இந்த நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக ஸ்ரீநிவாச மூர்த்தி மரணமடைந்தார். அவரது மரணம் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவு குறித்து நடிகர் சூர்யா ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது, ''இது எனக்கு தனிப்பட்ட முறையில் இழப்பு. ஸ்ரீநிவாசமூர்த்தியின் குரல் வழியாக உணர்வுகளைக் கடத்தி தெலுங்கில் எனது நடிப்புக்கு உயிர் கொடுத்தார். நீங்கள் எப்பொழுதும் நினைவு கூறப்படுவீர்கள் சார்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்திருந்த அந்நியன் திரைப்படம் தெலுங்கில் அபரசித்துடு என்ற பெயரில் வெளியாகி அங்கும் பெரும் வெற்றிபெற்றது. இந்தப் படத்தில் தமிழில் ஸ்பிலிட் பெர்சனாலிட்டி என்ற மன நோய் காரணமாக 3 விதமான மாடுலேஷனில் பேசுவார். விக்ரம் தவிர வேறு யாராலும் இந்த அளவுக்கு வேறுபாடு காட்டி நடிக்க முடியாது என விமர்சகர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

தெலுங்கிலும் விக்ரமின் நடிப்புக்கு நியாயம் சேர்க்கும்விதமாக குரல் கொடுத்திருப்பார் ஸ்ரீநிவாச மூர்த்தி. இந்த நிலையில் தெலுங்கு சேனல் ஒன்றில் ஸ்ரீநிவாசமூர்த்தி அந்நியன் விக்ரம் போல 3 விதமான மாடுலேஷனில் பேசி அசத்தினார். இந்த வீடியோவைப் பகிர்ந்த விக்ரம், ''நண்பா, நீங்களும், உங்களது இந்தத் திறனும் என்றும் நினைவில் கொள்ளப்படும்'' என்று தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Actor Vikram