முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / விக்ரமின் தங்கலான் படத்தில் இடம்பெறும் ஹாலிவுட் நடிகர்… படக்குழு அறிவிப்பு

விக்ரமின் தங்கலான் படத்தில் இடம்பெறும் ஹாலிவுட் நடிகர்… படக்குழு அறிவிப்பு

டேனியல் கால்டாகிரோன்

டேனியல் கால்டாகிரோன்

இந்த படத்தில் முதன்முறையாக பா. ரஞ்சித் - நடிகர் விக்ரம் கூட்டணி இணைந்துள்ளது. முக்கிய கேரக்டர்களில் பசுபதி, நடிகை பார்வதி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

விக்ரம் நடிப்பில், இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவரும் தங்கலான் படத்தில் ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டாகிரோன் இடம்பெற்றிருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். தற்போது தங்கலான் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் முதன்முறையாக பா. ரஞ்சித் - நடிகர் விக்ரம் கூட்டணி இணைந்துள்ளது. முக்கிய கேரக்டர்களில் பசுபதி, நடிகை பார்வதி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக, ஞானவேல் ராஜா இந்தப் படத்தை தயாரிக்கிறார். படத்தில் இடம்பெற்றுள்ள ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டாகிரோன் வில்லன் கேரக்டரில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விக்ரம் நடிப்பில் கடைசியாக வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் மிகப் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாக உள்ளது.

இதற்கு முன்பாக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விக்ரமின் கோப்ரா திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. இந்நிலையில் தங்கலான் திரைப்படம் விக்ரம் கேரியரில் முக்கிய படமாக அமையும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். பா.ரஞ்சித் கடைசியாக நட்சத்திரம் நகர்கிறது என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார். அதற்கு முன்பு அவரது இயக்கத்தில் வெளிவந்த சார்பட்டா பரம்பரை திரைப்படம் மிகப்பெரும் வெற்றியை பெற்றது. தங்கலான் திரைப்படம் பீரியட் மூவி உருவாக்கப்பட்டு வருகிறது. இதில் விக்ரமுக்கு ஜோடியாக தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக இருக்கும் மாளவிகா மோகனன் நடித்து வருகிறார்.

First published:

Tags: Actor Vikram