ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

விக்ரம் நடிக்கும் தங்கலான் படத்தின் ஓ.டி.டி. உரிமையைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்…

விக்ரம் நடிக்கும் தங்கலான் படத்தின் ஓ.டி.டி. உரிமையைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்…

தங்கலான் படத்தில் விக்ரம்

தங்கலான் படத்தில் விக்ரம்

தங்கலான் திரைப்படத்தில் விக்ரம், பசுபதி, மாளவிகா மோகனன், பார்வதி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பா. ரஞ்சித் இந்த படத்தை இயக்குகிறார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் தங்கலான்படத்தின் ஓ.டி.டி. உரிமையை பிரபல நிறுவனம் மிகப்பெரும் தொகைக்கு கைப்பற்றியுள்ளது. இதனால் படக்குழுவினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கும் தங்கலான் என்ற படத்தில் விக்ரம் நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு கடந்த 18ஆம் தேதி ஆந்திர மாநிலம் கடப்பாவில் தொடங்கியது.

    இது கோலார் தங்க வயலில் வரலாற்று பின்னணியில் எடுக்கப்படுகிறதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் விக்ரம்,  பசுபதி, மாளவிகா மோகனன், பார்வதி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

    தங்கலான் திரைப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த திரைப்படத்தை பான் இந்தியா திரைப்படமாக வெளியிட உள்ளனர்.

    Miral Movie Review : பரத் – வாணிபோஜன் நடித்துள்ள 'மிரள்' படத்தின் விமர்சனம்…

    இந்நிலையில் தியேட்டர் ரிலீஸுக்கு பிந்தைய ஓடிடி வெளியீட்டை பிரபல நிறுவனமான நெட்ஃப்ளிக்ஸ் கைப்பற்றியுள்ளது. சுமார் 35 கோடி ரூபாய்க்கு தங்கலான் படத்தின் போஸ்ட் தியேட்ரிகல் உரிமையை நெட் ஃப்ளிக்ஸ் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அதிக தொகைக்கு தங்கலான் படம் வர்த்தகம் செய்துள்ளதால் படக்குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர்.

    ' isDesktop="true" id="835199" youtubeid="Dkbiq3QrpG4" category="cinema">

    விக்ரம் நடிப்பில் கடைசியாக கோப்ரா மற்றும் பொன்னியின் செல்வன் படங்கள் வெளிவந்தன. இவ்விரு படங்களுமே சினிமா ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்டவை. இவற்றில் கோப்ரா திரைப்படம் படுதோல்வியை சந்தித்துள்ளது.

    பலவீனமான திரைக்கதை, தேவையற்ற காட்சிகளால் கோப்ரா படம் ரசிகர்களை ஈர்க்காமல் சென்றது. இருப்பினும், பொன்னியின் செல்வன் படத்தின் பிரமாண்ட வெற்றியால் விக்ரம் ரசிகர்கள் ஆறுதல் அடைந்துள்ளனர்.

    திரையரங்கில் இன்று வெளியானது சமந்தாவின் ’யசோதா’ : படம் எப்படி இருக்கு?

    அடுத்ததாக, வருடக் கணக்கில் கிடப்பில் போடப்பட்டுள்ள துருவ நட்சத்திரம் திரைப்படம் இன்னும் சில மாதங்களில் திரைக்கு வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கவுதம் மேனன் இயக்கியுள்ள ஆக்சன் த்ரில்லர் படமான துருவ நட்சத்திரத்தின் வருகையை, சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளார்கள்.

    Published by:Musthak
    First published:

    Tags: Kollywood