• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Vikram-Suriya: கவனம் பெறும் விக்ரம்-சூர்யாவின் ‘த்ரோபேக்’ படம்!

Vikram-Suriya: கவனம் பெறும் விக்ரம்-சூர்யாவின் ‘த்ரோபேக்’ படம்!

விக்ரம் - சூர்யா

விக்ரம் - சூர்யா

பாலா படங்களின் மூலம் தங்கள் நடிப்பு திறமையை நிரூபித்த விக்ரமும், சூர்யாவும் அவரின் ‘பிதாமகன்’ படத்தில் இணைந்து நடித்திருந்தார்கள்.

  • Share this:
    நடிகர் விக்ரம் மற்றும் சூர்யாவின் த்ரோபேக் படம் ஒன்று ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

    சினிமாவுக்குள் நுழைந்து கிட்டத்தட்ட 25 படங்களுக்கு மேல் நடித்த விக்ரமுக்கு, இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் 1999-ம் ஆண்டு வெளியான ‘சேது’ தான் அவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதே போல் இயக்குநர் வஸந்தின் ‘நேருக்கு நேர்’ படத்தில் அறிமுகமான சூர்யாவின் திரை வாழ்க்கையை மாற்றியதும், பாலாவின் ‘நந்தா’ திரைப்படம் தான்.

    பாலா படங்களின் மூலம் தங்கள் நடிப்பு திறமையை நிரூபித்த விக்ரமும், சூர்யாவும் அவரின் ‘பிதாமகன்’ படத்தில் இணைந்து நடித்திருந்தார்கள். இப்படம் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை விக்ரமுக்கு பெற்றுத் தந்தது. அதோடு, பாலா, விக்ரம், சூர்யா, லைலா, சங்கீதா என அனைவருக்கும் சிறந்த பங்களிப்பிற்காக ஃபிலிம் ஃபேர் விருதும் கிடைத்தது.

    Vikram Suriya's throwback picture goes viral
    விக்ரம் - சூர்யா


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில் தற்போது விக்ரம் மற்றும் சூர்யா எடுத்துக் கொண்ட த்ரோபேக் படம் ஒன்று சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது. அதை இருவரின் ரசிகர்களும் அதிகளவில் பகிர்ந்து வருகிறார்கள். மீண்டும் அவர்கள் இணைந்து நடிப்பார்களா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: