Home /News /entertainment /

கமல்ஹாசனின் விக்ரம் படம் தமிழகத்தில் இதுவரை செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?

கமல்ஹாசனின் விக்ரம் படம் தமிழகத்தில் இதுவரை செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?

விக்ரம் படத்தில் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில்

விக்ரம் படத்தில் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில்

அடுத்த சில வாரங்களுக்கும் விக்ரம் படம் தியேட்டர்களில் ஓடும் என்று எதிர்பார்க்கப்படுவதால் மிக அதிகமான வசூலை விக்ரம் எட்டும் எனறு எதிர்பார்க்கப்படுகிறது.

  • News18
  • Last Updated :
    கமல்ஹாசனின் நடிப்பில் கடந்த 3ம் தேதி வெளியான விக்ரம் படம் இதுவரை ரூ. 77 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    கடந்த ஜுன் 3 ம் தேதி உலகம் முழுவதும் கமல்ஹாசன் நடிப்பில்  விக்ரம் வெளியாகி பிரமாண்ட வரவேற்பை பெற்று வருகிறது. கமலுடன் விஜய் சேதுபதி, பகத் பாசில், சிறப்பு தோற்றத்தில் சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

    ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைத்திருக்கும் இப்பட பாடல்கள் அனைத்துமே செம ஹிட். தற்போது படம் வசூலிலும் நல்ல வேட்டை நடத்தி வருகிறது.

    இந்நிலையில் கமல் நடித்த படங்களிலேயே முதல் நாளில் மிக அதிகமான வசூலை விக்ரம் குவித்துள்ளது. தமிழ் நாட்டில் சுமார் 21 கோடி ரூபாய் அளவுக்கு விக்ரம் படம் முதல் நாளில் கலெக்சன் ஆகியிருப்பதாக தகவல்கள் தெரிவித்தன.

    அடுத்த சில வாரங்களுக்கும் விக்ரம் படம் தியேட்டர்களில் ஓடும் என்று எதிர்பார்க்கப்படுவதால் மிக அதிகமான வசூலை விக்ரம் எட்டும் எனறு எதிர்பார்க்கப்படுகிறது.

    Also read... தமிழ் சினிமாவின் சகலகலா வல்லவன் கமல்ஹாசன்...!

    விரைவில் தமிழகத்தில் மட்டுமே ரூ. 100 கோடி வசூலை எட்ட இருக்கும் விக்ரம் தற்போது 4 நாள் முடிவில் மட்டும் ரூ. 77 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Anirudh, Kamal Haasan, Lokesh Kanagaraj

    அடுத்த செய்தி