Home /News /entertainment /

விக்ரமின் கோப்ரா படத்திலிருந்து அடுத்த பாடல் நாளை வெளியாகிறது!!

விக்ரமின் கோப்ரா படத்திலிருந்து அடுத்த பாடல் நாளை வெளியாகிறது!!

ஏ.ஆர். ரகுமான் - தாமரை

ஏ.ஆர். ரகுமான் - தாமரை

Cobra Songs : கோப்ரா திரைப்படம் ஆகஸ்ட் 11ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது

    விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்திலிருந்து அடுத்த பாடல் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் ஆகிய படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் கோப்ரா.

    செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ  தயாரிக்கும் இந்தப்படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி ஹீரோயினாக நடித்துள்ளார். ஆனந்த ராஜ், ரோபோ ஷங்கர், மியா ஜார்ஜ், பூவையார், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

    ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகியுள்ள இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் நடித்திருக்கிறார்.

    இதையும் படிங்க - நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகர்… காரணம் இதுதானாம் 

    ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் வெளியான இந்தப் படத்தின் "தும்பி துள்ளல்" பாடல் சூப்பர் ஹிட் வரிசையில் இடம் பிடித்தது.

    இதனைத் தொடர்ந்து அதீரா என்ற பாடலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் கோப்ரா படத்திலிருந்து அடுத்த பாடலாக ‘உயிர் உருகுதே’ என்ற பாடல் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடலை தாமரை எழுதியுள்ளார்.



    கோப்ராவில் விக்ரமின் கதாப்பாத்திரம் குறித்த கேள்விக்கு பதிலளித்திருந்த இயக்குனர் அஜய் ஞானமுத்து, "கடும் விஷம் கொண்ட கிங் கோப்ரா பாம்பு  எதிர்பாராத வகையில் தாக்குதல் நடத்துவது போல, எதிர்பாராமல் செயல்படும் பல கதாப்பாத்திரத்தில் விக்ரம் நடித்துள்ளார். அனைவரும் தியேட்டரில் பார்க்க வேண்டிய படமாக கோப்ரா இருக்கும்" எனத் தெரிவித்தார்.

    இதையும் படிங்க - மழையில் நடனமாடும் ‘நாகினி’ நடிகை - போட்டோஸ்

    கோப்ரா திரைப்படம் ஆகஸ்ட் 11ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை தமிழ்நாட்டில் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகிறது.
    Published by:Musthak
    First published:

    Tags: AR Rahman, Cobra Movie

    அடுத்த செய்தி