Home /News /entertainment /

ஏ.ஆ.ரகுமான் குரலில் கோப்ரா படத்தின் 3-வது பாடல் வெளியீடு!!

ஏ.ஆ.ரகுமான் குரலில் கோப்ரா படத்தின் 3-வது பாடல் வெளியீடு!!

கோப்ரா படத்தில் விக்ரம் - ஸ்ரீனிதி ஷெட்டி

கோப்ரா படத்தில் விக்ரம் - ஸ்ரீனிதி ஷெட்டி

Cobra Songs : ஏற்கனவே வெளியான தும்பி துள்ளல் மற்றும் ஆதிரா இரண்டு பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன.

ஏ.ஆர். ரகுமான் இசையமைத்து பாடியுள்ள கோப்ரா திரைப்படத்தின் மூன்றாவது பாடல் வெளியாகி உள்ளது.

விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் லலித் குமார் தயாரிக்கும் திரைப்படம் கோப்ரா. இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.

இதற்கான படப்பிடிப்பு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கி நடைபெற்றது. இந்த நிலையில் இறுதி கட்டப் பணிகள் நிறைவடைந்து வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி படத்தை வெளியிட உள்ளனர். அதற்காக படத்தை பிரபலப்படுத்தும் வேலையில் தயாரிப்பு நிறுவனம் இறங்கியுள்ளது.

கம்பீரமாக விக்ரம்... வரவேற்பைப் பெறும் பொன்னியின் செல்வன் ஆதித்ய கரிகாலன் லுக்! 

அதில் ஏ.ஆர். ரகுமான் இசையில் உருவாகியுள்ள பாடல்களை சிங்கிள் ட்ராக் முறையில் ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் ஏற்கனவே வெளியான தும்பி துள்ளல் மற்றும் ஆதிரா இரண்டு பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன.

இதையும் படிங்க - அரசியலில் நுழையும் எந்த எண்ணமும் இல்லை - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விஷால்

இந்த நிலையில் தற்போது மூன்றாவதாக உயிர் உருகுதே என்ற பாடலை வெளியிட்டுள்ளனர். அந்த பாடலை தாமரை எழுதியுள்ளார்.



பாடலைப் பார்க்கக...



அதேபோல் ஏ.ஆர். ரகுமான் உயிர் உருகுதே பாடலை பாடியுள்ளார். கோப்ரா திரைப்படத்தின் பாடல்கள் தொடர்ந்து வெளியாகி வெற்றியடைந்து வருகின்றன. அந்த வகையில் இந்த மூன்றாவது பாடலும் வரவேற்பு பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Published by:Musthak
First published:

Tags: Actor Vikram

அடுத்த செய்தி