Home /News /entertainment /

விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தின் பாடல்கள் லிஸ்ட் வெளியீடு…

விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தின் பாடல்கள் லிஸ்ட் வெளியீடு…

விக்ரம்

விக்ரம்

Cobra Album : கடந்த சில நாட்களாக விக்ரமுக்கு உடல் நலன் பாதிப்பு என தகவல்கள் வெளியான நிலையில் நாளை நடைபெறவுள்ள பாடல் வெளியீட்டு விழாவில் அவர் பங்கேற்கிறார்.

    விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தின் பாடல்கள் லிஸ்ட் வெளியிடப்பட்டுள்ளது. நாளை ஆடியோ லான்ச் பிரமாண்டமான முறையில் நடைபெறவிருக்கும் நிலையில் பாடல்கள் பட்டியல் வெளியானது.

    விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக கேஜிஎஃப் 2 படத்தில் நடித்த ஸ்ரீனிதி ஷெட்டி இடம்பெற்றுள்ளார்.

    கொரோனா பிரச்னைகளுக்கு மத்தியில் சுமார் 2 ஆண்டுகளாக கோப்ரா படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இந்நிலையில் அடுத்த மாதம் 11ம் தேதி படம்  வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

    இதையும் படிங்க - விக்ரம் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு… வியப்பை ஏற்படுத்தும் காட்சிகள்

    ஏ.ஆர். ரகுமான் இசையில் இதுவரை படத்திலிருந்து 3 பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்ததாக படத்தின் ட்ரெய்லர் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    நாளை கோப்ரா படத்தின் ஆடியோ லான்ச் நடைபெறவுள்ள நிலையில் இன்று பாடல்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.

    மொத்தம் 5 பாடல்களைக் கொண்டதாக கோப்ரா ஆல்பம் உருவாக்கப்பட்டுள்ளது.

    தும்பி துள்ளல் என்ற பாடலை விவேக் ஜிதின் ராஜ் எழுத, ஷ்ரேயா கோஷல் நகுல் அப்யங்கர் பாடியுள்ளனர். அதீரா பாடலை பா விஜய் எழுதியுள்ளார். இதனை வகு மஸன் பாடியிருக்கிறார்.

    இதையும் படிங்க - ‘சிறந்த பான் – இந்தியா படமாக பொன்னியின் செல்வன் அமையும்’ – த்ரிஷா

    தாமரை எழுதியுள்ள உயிர் உருகுதே பாடலை ஏ.ஆர்.ரகுமான் பாடியுள்ளார். இந்த 3 பாடல்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. இதைத் தவிர்த்து தரங்கினி எனத் தொடங்கும் பாடலை தாமரை எழுத சர்தக் கல்யாணி பாடியுள்ளார்.

    பா.விஜய் எழுதியுள்ள ஏலே இளஞ்சிங்கமே என்ற பாடலை ரக்சிதா சுரேஷ் பாடியிருக்கிறார். கடந்த சில நாட்களாக விக்ரமுக்கு உடல் நலன் பாதிப்பு என தகவல்கள் வெளியான நிலையில் நாளை நடைபெறவுள்ள பாடல் வெளியீட்டு விழாவில் அவர் பங்கேற்பார் என்ற அறிவிப்பால் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
    Published by:Musthak
    First published:

    Tags: Actor Vikram, Cobra Movie

    அடுத்த செய்தி