விக்ரம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த சூர்யாவுக்கு, கமல் ரோலக்ஸ் வாட்சை பரிசளித்துள்ளார். இதுதொடர்பான ஃபோட்டோ வைரலாகி வருகிறது.
கமலின் கடந்த 2 நாட்கள் நடவடிக்கையை பார்க்கும்போது, அவர் பரிசளிப்பு விழா நடத்தி வருகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. விக்ரம் படத்தை வெற்றிப் படமாக உருவாக்கிய இயக்குனர் லோகேஷ்க்கு நேற்று லெக்சஸ் சொகுசு காரை கமல் பரிசளித்தார்.
இந்த காரின் விலை ரூ. 80 லட்சம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் முகப்பில் இருக்கும் L என்ற லெக்சஸின் லோகோவை, லோகேஷ் என்று அவரது ரசிகர்கள் அழைக்கிறார்கள்.
இதையும் படிங்க - இந்த ஹிட் பாடல்களை எழுதியது விக்னேஷ் சிவனா? இளம் இயக்குனரின் இன்னொரு பக்கம்
அடுத்ததாக உதவி இயக்குனர்கள் 13 பேருக்கு TVS Apache 160 CC RTR பைக்குகளை கமல் பரிசளித்துள்ளார். இந்த பைக்குகள் ஒவ்வொன்றும் தலா ரூ. 1.20 லட்சம் வரை வருகின்றன.
கமலின் பரிசளிப்பு தொடரும் என்று நேற்றே பலரும் எதிர்பார்த்தனர். இந்த நிலையில் சர்ப்ரைஸாக நடிகர் சூர்யாவுக்கு அவர் ரோலக்ஸ் வாட்ச்சை பரிசளித்துள்ளார்.
இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. விக்ரம் படத்தில் சூர்யா ரோலக்ஸ் என்ற கேரக்டரில் மிரட்டியிருப்பார். விக்ரம் படத்திற்காக சூர்யா சம்பளம் ஏதும் வாங்காமல் நடித்திருந்தார்.
இதனை தன் மீது கொண்ட அன்புக்காக சூர்யா செய்தார் என்று கமலும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் ரோலக்சுக்கு ரோலக்ஸ் வாட்ச் பரிசளிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வின்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இருந்தார்.
இதையும் படிங்க - நயன்தாரா பற்றி யாருக்கும் தெரியாத தகவல்கள்..
இதுதொடர்பான ஃபோட்டோக்களை பதிவிட்டுள்ள சூர்யா, இந்த தருணம் வாழ்க்கையை இன்னும் அழகாக்குகிறது. நன்றி அண்ணா (கமல்) என்று ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். சூர்யாவின் ரோலக்ஸ் வாட்ச்சை பார்க்கும்போது இந்த சம்பவம் இன்று மதியம் 1 மணிக்கு நடந்திருப்பதாக தெரிகிறது.
அடுத்ததாக கார்த்தியுடன் லோகேஷ் கைதி 2 படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது கைதி படத்தின் ப்ரீக்வல், அதவாது கைதிக்கு முன்பு டில்லி செய்த சம்பவங்களாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதன்பின்னர் விக்ரம் 3 தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கமலின் பரிசு மழை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.