முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / விக்ரம் படப்படிப்பில் முக்கிய மாற்றம்... படக்குழு திடீர் முடிவு

விக்ரம் படப்படிப்பில் முக்கிய மாற்றம்... படக்குழு திடீர் முடிவு

விக்ரம் படம்

விக்ரம் படம்

நரேன், காளிதாஸ் ஜெயராம், செம்பன் வினோத் உள்ளிட்ட மலையாள நடிகர்கள் விக்ரம் படத்தில் நடிக்கின்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

கமலுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் தொகுத்து வழங்கி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை அவருக்குப் பதில் ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்குகிறார். விக்ரம் படப்பிடிப்பிலும் கமலின் உடல்நலக்குறைவு காரணமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கமலின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் விக்ரம் படத்தை தயாரித்து வருகிறது. பகத் பாசில், விஜய்சேதுபதி முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இதில் விஜய் சேதுபதி வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது. கமலும் அவரும் மோதும் காட்சியை படமாக்குவதற்காக பொள்ளாச்சியில் பிரமாண்ட கராஜ் (Garage) அரங்கை அமைத்து வந்தனர். அதன் பணிகள் ஏறக்குறைய முடிந்த நிலையில் தற்போது அதனை சென்னைக்கு மாற்றுகின்றனர். கமலின் உடல்நிலையை கருத்தில் கொண்டு இந்த மாற்றத்தை செய்கின்றனர்.

இந்த அரங்கில் உடைந்த பழுதடைந்த கார்களை பெருமளவில் நிரப்பியிருந்தனர். அதனை சென்னையில் உள்ள பின்னி மில்லுக்கு மாற்றி, அங்கு காட்சிகளை படமாக்குகின்றனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் விக்ரமுக்கு க்ரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். நரேன், காளிதாஸ் ஜெயராம், செம்பன் வினோத் உள்ளிட்ட மலையாள நடிகர்கள் நடிக்கின்றனர். கமல் கொரோனாவுக்கான தடுப்பூசி இரண்டு டோஸ் முறையாக எடுத்துக் கொண்டிருந்தார். யுஎஸ் சென்று திரும்பிய நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. உடனடியாக மருத்துவமனையில் அட்மிட் ஆகிமுறையான சிச்சை எடுத்து வருகிறார். கமல் உடல்நிலை தேறி வருவதற்காக மொத்த படக்குழுவும் பிரார்த்தனையுடன் காத்திருக்கிறது.

First published:

Tags: Kamal Haasan