ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

விக்ரமின் மலரும் நினைவுகளை தூண்டிய அந்த வீடியோ!

விக்ரமின் மலரும் நினைவுகளை தூண்டிய அந்த வீடியோ!

விக்ரம்

விக்ரம்

பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனாக நடித்து பெரும் வரவேற்பைப் பெற்றார் விக்ரம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் விக்ரம் தனது பழைய வீடியோவை பதிவிட்ட பயனரின் ட்வீட்டை பகிர்ந்து ’மலரும் நினைவுகள்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

சினிமாவில் டப்பிங் கலைஞராக பயணத்தை தொடங்கி தற்போது முன்னணி நடிகராக வளர்ந்துள்ளார். ஒவ்வொரு திரைப்படத்திற்கும் கதைக்கு தகுந்தவாறு தன்னுடைய உடல் எடையை ஏற்றி இறக்கி நடிப்பதில் கவனம் செலுத்துவார். சேது, பிதாமகன், காசி, ஐ என படங்களின் கதாபாத்திரத்திற்காக அவர் எடுத்த ரிஸ்க், வேறு எந்த நடிகரும் நினைத்துக் கூட பார்க்க முடியாதது.

கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் உடலை வருத்தி நடிக்கவும் முடியும், கமர்ஷியல் படங்களில் மாஸ் ஹீரோவாக வெற்றி கொடியையும் நாட்ட முடியும் என நிரூபித்திருக்கிறார் விக்ரம். இறுதியாக பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனாக நடித்து பெரும் வரவேற்பைப் பெற்றார். தற்போது தங்கலான் படத்தில் நடித்து வருகிறார்.

பசங்க பட அன்புவுக்கு கல்யாண வயசாச்சா? பொண்ணு யார் தெரியுமா?

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கும் இந்தப் படத்தில் விக்ரமுடன் இணைந்து பசுபதி, பார்வதி, மாளவிகா மோகனன் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். படத்திற்கு இசை ஜி.வி.பிரகாஷ். இந்நிலையில் தற்போது விக்ரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பயனர் ஒருவரின் வீடியோவை ’மலரின் நினைவுகள்’ எனக் குறிப்பிட்டு பகிர்ந்துள்ளார். 2013-ல் டேவிட் படத்தின் புரொமோஷனின் பாடல் பாடிய விக்ரமின் வீடியோ தான் அது. அதற்கு தற்போது லைக்ஸ் குவிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Vikram