Home /News /entertainment /

விக்ரம் படத்தில், விஜய் சேதுபதிக்கு பதிலாக நடிக்கவிருந்த 2 நடிகர்கள்… சுவாரசிய தகவல்

விக்ரம் படத்தில், விஜய் சேதுபதிக்கு பதிலாக நடிக்கவிருந்த 2 நடிகர்கள்… சுவாரசிய தகவல்

விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி

விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி

Vikram Santhanam : நீண்ட நாட்களுக்கு பின்னர் தமிழில் மிகத் தரமான படைப்பு வெளிவந்திருப்பதை கோலிவுட் கொண்டாடி வருகிறது.

விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக நடிப்பதற்கு 2 நடிகர்கள் தேர்வு செய்யப்பட்டிருந்ததாக சுவாரசிய தகவல் வெளிவந்துள்ளது.

கடந்த வாரம் வெளியான விக்ரம் திரைப்படம் உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த வாரமும் அடுத்த வாரமும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக செல்வதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளதால் மிகப் பெரும் வசூலை இந்தப் படம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விக்ரம் படத்தில் கமல்ஹாசன், ஃபகத் பாசிலுக்கு சவால் கொடுக்கும் வகையில் சந்தானம் என்ற கேரக்டரில் விஜய் சேதுபதி நடித்திருப்பார். அவரது ஆரம்ப காட்சி முதல், இறுதிக் காட்சி வரையில் வில்லத்தனம், நக்கலான பதில்களால் ரசிகர்கள் மனதில் தனி இடத்தை விஜய் சேதுபதி பிடித்து விட்டார்.

இதையும் படிங்க - இன்னொரு செட்டில்மென்ட்! லோகேஷுக்கு Lexus சொகுசு காரை பரிசளித்த கமல்…

இதற்கு முன்னர் பார்த்திராத ஒரு பாடி லேங்குவேஜில் விஜய் சேதுபதி இந்த படத்தில் நடித்திருப்பதை பார்க்க முடிகிறது. இந்நிலையில் சந்தானம் கேரக்டருக்கு முதலில் விஜய் சேதுபதி தேர்வாகவில்லை என்று தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த கேரக்டருக்கு முதலில் பிரபு தேவா அல்லது லாரன்ஸை நடிக்க வைக்கலாம் என்ற முடிவில்தான் படக்குழுவினர் இருந்தார்களாம்.

பின்னர் சில காரணங்களால் விக்ரம் படத்திற்குள் வந்துள்ளார் விஜய் சேதுபதி. பெரும்பாலான சினிமா ரசிகர்கள் விக்ரம் படத்தை பார்த்துவிட்ட நிலையில் இனி ரிப்பீட் ஆடியன்ஸ்தான் அதிகம் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க - கமல்ஹாசனின் விக்ரம் படம் தமிழகத்தில் இதுவரை செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?

நீண்ட நாட்களுக்கு பின்னர் தமிழில் மிகத் தரமான படைப்பு வெளிவந்திருப்பதை கோலிவுட் கொண்டாடி வருகிறது. அடுத்ததாக இயக்குனர் ரோகேஷ் கனகராஜ் விஜய் நடிக்கும் அவரது 67வது படத்தை இயக்கவுள்ளார்.

மகேஷ் நாராயணன் இயக்கத்தில் ஒரு படத்தில் கமல் நடிக்கப் போகிறார். இந்த படத்தின் டைட்டில் தலைவன் இருக்கிறான் என்பதாக கோலிவுட்டில் பேசப்படுகிறது.
Published by:Musthak
First published:

அடுத்த செய்தி