முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ஜெய் பீம் படத்தால் விக்ரம் பிரபுவின் டாணாக்காரனுக்கு எகிறும் எதிர்பார்ப்பு!

ஜெய் பீம் படத்தால் விக்ரம் பிரபுவின் டாணாக்காரனுக்கு எகிறும் எதிர்பார்ப்பு!

டாணாக்காரன்

டாணாக்காரன்

ஜெய் பீம் படத்தில் தமிழின் சிறப்பான நடிப்பு அவர் இயக்கியிருக்கும் படத்துக்கு விளம்பரமாக அமைந்திருக்கிறது.

  • Last Updated :

சூர்யாவின் ஜெய் பீம் திரைப்படம் ஒட்டு மொத்த ரசிகர்களின் பாராட்டையும் பெற்றுள்ளது. இதுதான் படம், இப்படித்தான் படம் எடுக்கணும் என்று ஜெய் பீமை பென்ச் மார்க்காக வைத்து பேச ஆரம்பித்திருக்கிறார்கள். விளிம்புநிலை மனிதர்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறையை படமாக்கிய துணிச்சலுக்கும், நேர்மைக்கும், கலாபூர்வ அணுகுமுறைக்கும் கிடைத்த அங்கீகாரம் இந்தப் பாராட்டுகள்.

ஜெய் பீமில் கொடூரமான போலீஸ் அதிகாரியாக நடித்தவர் தமிழ். திரையில் இவரை பார்க்கையில், எழுந்து போய் அடிக்கத் தோன்றும். அப்படியொரு கொடூர கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார். நாயகனுக்கு குறையாத கவனம் இந்த போலீஸ் வில்லனுக்கும் கிடைத்திருக்கிறது. இவர் அடிப்படையில் ஓர் இயக்குனர். இவர் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்திருக்கும் படம் டாணாக்காரன். ஜெய் பீம் படத்தில் இவரது நடிப்புக்கு கிடைத்த கவனம் டாணாக்காரன் மீதும் குவிந்திருக்கிறது.

Also read... தீபாவளியை முன்னிட்டு மீண்டும் கட்டணக் கொள்ளையை தொடங்கும் திரையரங்குகள்!

ஜெய் பீமில் சிறப்பாக நடித்தார் என்பதற்காக மட்டும் இவர் இயக்கிய டாணாக்காரன் பேசு பொருளாகவில்லை. டாணாக்காரன் கதை வித்தியாசமானது. இதுவரை திரைப்படங்களிலும், நேரிலும் போலீஸின் வன்முறையைத்தானே பார்த்திருப்போம். போலீஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு போலீஸ் அகதாமியில் பயிற்சி அளிக்கப்படும்.

ராணுவ வீரர்களுக்கு கொடுப்பார்களே, அப்படி. பெயரளவில் அது பயிற்சி என்றாலும் கிட்டத்தட்ட அதுவொரு சித்திரவதை. பயிற்சி தரும் அதிகாரிக்கு உங்களைப் பிடிக்காமல் போனால் விதவிதமான தண்டனைகள் தரப்படும். மயங்கி விழுவது அங்கு சாதாரணம். அந்த அசாதாரண பயிற்சியைத்தான் டாணாக்காரன் ரத்தமும் சதையுமா சொல்கிறது

top videos

    ஜெய் பீம் படத்தில் தமிழின் சிறப்பான நடிப்பு அவர் இயக்கியிருக்கும் படத்துக்கு விளம்பரமாக அமைந்திருக்கிறது. டாணாக்காரனும் வெல்லட்டும்.

    First published:

    Tags: Vikram Prabhu