முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகவிருக்கும் விக்ரம் பிரபுவின் 'துப்பாக்கி முனை'

கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகவிருக்கும் விக்ரம் பிரபுவின் 'துப்பாக்கி முனை'

விக்ரம் பிரபு

விக்ரம் பிரபு

விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவந்த அதிரடி போலீஸ் கதையான துப்பாக்கி முனை திரைப்படத்தை கலர்ஸ் தமிழ் ஒளிபரப்புகிறது

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

வயகாம்18 நிறுவனத்தின் தமிழ் தொலைக்காட்சியான கலர்ஸ் தமிழ், வரும் ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 26, 2023 அன்று மதியம் 2 மணிக்கு அதிரடி திரில்லர் திரைப்படமான “துப்பாக்கி முனை” திரைப்படத்தை ஒளிபரப்புகிறது.

இதில் விக்ரம் பிரபு மற்றும் ஹன்சிகா மோத்வானி நடித்துள்ளனர். என்கவுன்டர் நிபுணரான விக்ரம் பிரபு, கொடூரமாக பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் வழக்கில் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து அவர்களை சுட்டு தள்ளுகிறாரா இல்லையா என்பதை சுற்றிய கதையாகும். அனுபவமிக்க கலைஞர்களான எம் எஸ் பாஸ்கர் மற்றும் ஆடுகளம் நரேன் ஆகியோருடன் கல்யாணி மற்றும் அம்மு அபிராமி ஆகியோர் துணை நடிகர்களாக இத்திரைப்படத்தில் நடித்திருக்கின்றனர்.

படத்தைப் பற்றி இயக்குநர் தினேஷ் செல்வராஜ் கூறுகையில், “விக்ரம் பிரபு இந்த படத்தில் தனது முழு அர்ப்பணிப்பு மூலம் தனது கதாபாத்திரத்தோடு ஒன்றிணைந்து தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி நம்மை மிகவும் ஈர்த்துள்ளார்.

இப்படத்தின் ஆக்ஷன் காட்சிகள் அனைத்தும் கலர்ஸ் தமிழின் பார்வையாளர்களை நிச்சயம் ஈர்க்கும். முக்கியமாக எம். எஸ். பாஸ்கர் மற்றும் ஆடுகுளம் நரேன் போன்ற பிற கலைஞர்களும் தங்கள் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த அதிரடி ஆக்ஷன் திரில்லர் படத்தை உங்கள் குடும்பத்தினருடன் கண்டு மகிழ வரும் ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 26, 2023 அன்று மதியம் 2 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை காணத்தவறாதீர்கள்.

First published:

Tags: Colors Tamil | கலர்ஸ் தமிழ்