Home /News /entertainment /

கமலின் குரலில் ‘பத்தல பத்தல’ தெலுங்கு லிரிக்கல் வீடியோ வெளியீடு… யூடியூபில் குவியும் லைக்ஸ்…

கமலின் குரலில் ‘பத்தல பத்தல’ தெலுங்கு லிரிக்கல் வீடியோ வெளியீடு… யூடியூபில் குவியும் லைக்ஸ்…

பத்தல பத்தல தெலுங்கு பாடலுக்கான போஸ்டர்.

பத்தல பத்தல தெலுங்கு பாடலுக்கான போஸ்டர்.

விக்ரம் படத்தின் தெலுங்கு வெர்ஷனுக்கும் முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட்டுகள் டிமாண்டாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

கமலின் குரலில் விக்ரம் படத்தில் இடம்பெற்றுள்ள பத்தல பத்தல பாடலின் தெலுங்கு வெர்ஷன் வெளியாகியுள்ளது. லிரிக்கல் வீடியோவாக வெளியாகியுள்ள இந்த பாடல் யூடியூபில் லைக்ஸை குவித்து வருகிறது.

தமிழில் விக்ரம் என வெளியாகும் கமலின் படம், தெலுங்கில் விக்ரம் ஹிட் லிஸ்ட் என்ற பெயரில் வெளியாகிறது. ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் மட்டும் சுமார் 400-க்கும் அதிகமான திரையரங்குகளில் படத்தை வெளியிட ஏற்பாடுகள் நடந்து முடிந்துள்ளன.

கடந்த 12ம் தேதி வெளியான மகேஷ் பாபுவின் சர்காரு வாரி பாட்டா திரைப்படம் இன்றுடன் மூன்றாவது வாரத்தில் என்ட்ரி ஆகிறது. இதை தவிர்த்து பெரிய பட்ஜெட் படங்கள் குறுக்கே நிற்காததால் விக்ரம் படம் தெலுங்கு வட்டாரத்தில் நன்றாக ஓடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க - இயக்குநர் பாலாவுடன் சண்டையா? முற்றுப்புள்ளி வைத்த சூர்யா!

படத்திலிருந்து முதல் பாடலாக பத்தல பத்தல என்ற பாடல் வெளியாகி மெகா ஹிட்டாகியுள்ளது. குறிப்பாக பாடலில் இடம்பெற்ற ‘ஒன்றியத்தின் தப்பாலே ஒன்னியும் இல்லே இப்பாலே’ என்ற வரிகள் சர்ச்சையை ஏற்படுத்தின.

இதையும் படிங்க - விக்ரம் படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிட தடை… சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

இந்நிலையில் பத்தல பத்தல பாடலின் தெலுங்கு வெர்ஷனான ‘மதுகா மதுகா’ என்ற பாடலை கமல்ஹாசனே பாடியுள்ளார். அந்த பாடல் இன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.



விக்ரம் படத்திற்கு யு/ஏ சென்சார் சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிடுவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.



விக்ரம் படத்தின் தெலுங்கு வெர்ஷனுக்கும் முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட்டுகள் டிமாண்டாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

கமலுடன் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், சிறப்பு தோற்றத்தில் சூர்யா, நரேன், அர்ஜுன் தாஸ், ஹரிஷ் உத்தமன், ஆன்டனி வர்கீஸ், காயத்ரி, ஷிவானி நாராயணன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
Published by:Musthak
First published:

Tags: Vikram

அடுத்த செய்தி