Home /News /entertainment /

விக்ரம் – பா. ரஞ்சித் படத்தின் புதிய தகவல்…. கேரக்டர் குறித்த சூப்பர் அப்டேட்

விக்ரம் – பா. ரஞ்சித் படத்தின் புதிய தகவல்…. கேரக்டர் குறித்த சூப்பர் அப்டேட்

பா ரஞ்சித், விக்ரம், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா

பா ரஞ்சித், விக்ரம், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா

Vikram Pa ranjith : ஸ்டூடியோ கிரீன் தயாரிக்கும் படங்களிலேயே அதிக பொருட் செலவில் இந்தப் படம் உருவாக்கப்படுகிறது.

    நடிகர் விக்ரமுடன், பா. ரஞ்சித் இணையும் படம் குறித்த புதிய தகவல்கள் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்தப் படம் தொடர்பாக சூப்பர் அப்டேட் வெளியாகியுள்ளது.

    விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள கோப்ரா திரைப்படம் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏ.ஆர். ரகுமான் இசையில், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் ஆகஸ்ட் 11ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    கோப்ரா படத்தில் விக்ரம் 7 கேரக்டரில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. ஒரு கேரக்டரில் கணித பேராசிரியராக வருகிறார். இது படத்தின் முக்கிய கேரக்டராக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தபடத்தில் விக்ரமுக்கு ஜோடியாக கே.ஜி.எஃப். 2படத்தில் இடம்பெற்ற ஸ்ரீனிதி ஷெட்டி நடித்துள்ளார்.

    இதையும் படிங்க - நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகர்… காரணம் இதுதானாம்

    இந்த படத்தை தொடர்ந்து பா. ரஞ்சித்துடன் இணைகிறார் விக்ரம். இந்த படத்திற்கு மைதானம் என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதனை ஸ்டூடியோ க்ரீன் சார்பாக கே.இ.ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.  இதுவரையில் தொடர்ந்து சந்தோஷ் நாராயணனுடன் இணைந்து பணியாற்றி வந்த பா. ரஞ்சித் முதன் முறையாக  ஜி.வி. பிரகாஷ் உடன் மைதானம் படத்தில் இணைகிறார்.

    ஸ்டூடியோ கிரீன் தயாரிக்கும் படங்களிலேயே அதிக பொருட் செலவில் இந்தப் படம் உருவாக்கப்படுகிறது. இந்தியா முழுவதும் படமாக்கப்படவுள்ள மைதானம் படத்தில், தமிழ் நாட்டை சேர்ந்த பாரம்பரியம் மிக்க பாடி பில்டராக விக்ரம் நடிக்கிறார்.

    இதையும் படிங்க - மழையில் நடனமாடும் ‘நாகினி’ நடிகை - போட்டோஸ்

    பீரியட் மூவியாக உருவாகும் இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள், மைதானத்தை சுற்றியே நடைபெறும் என்பதால் இதற்கு மைதானம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.

    விரைவில் இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.
    Published by:Musthak
    First published:

    Tags: Actor Vikram, Pa. ranjith

    அடுத்த செய்தி