முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / கமல், பகத் பாசில், விஜய் சேதுபதி இணையும் விக்ரம் அடுத்த ஷெட்யூல்

கமல், பகத் பாசில், விஜய் சேதுபதி இணையும் விக்ரம் அடுத்த ஷெட்யூல்

விக்ரம்

விக்ரம்

விக்ரம் படத்தின் படப்பிடிப்பு மும்பை தாராவி பகுதியில் நடந்து வருகிறது. படத்தின் முக்கியமான காட்சிகளை லோகேஷ் கனகராஜ் அங்கு படமாக்கி வருகிறார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படம் வேகமாக வளர்ந்து வருகிறது. நடுவில் கமலுக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டதால் படப்பிடிப்பு தடைபட்டது. பொள்ளாச்சியில் போட்ட அரங்கை அப்படியே சென்னை பின்னி மில்லிற்கு மாற்றினர். படத்தின் புதிய அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

விக்ரம் படம் பெரிய பட்ஜெட்டில் தயாராகிறது. கமலின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் படத்தை தயாரிக்கிறது. கமலுடன், பகத் பாசில், விஜய் சேதுபதி என முக்கியமான நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர். இதன் காரணமாக பட அறிவிப்பின் போதே இந்திய அளவில் படம் பேசப்பட்டது.

தற்போது  விக்ரம் படத்தின் படப்பிடிப்பு மும்பை தாராவி பகுதியில் நடந்து வருகிறது. படத்தின் முக்கியமான காட்சிகளை லோகேஷ் கனகராஜ் அங்கு படமாக்கி வருகிறார். இதனைத் தொடர்ந்து கோயம்புத்தூரில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த ஷெட்யூல்டில் கமல், பகத் பாசில், விஜய் சேதுபதி மூவரும் இணைந்து நடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விக்ரமில் இவர்கள் மூவருடன் நரேன், காளிதாஸ் ஜெயராம், செம்பன் வினோத் உள்பட மேலும் பலர் நடிக்கின்றனர். க்ரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்ய, அன்பறிவ் சண்டைப் பயிற்சியை கவனிக்கின்றனர். படத்திற்கு இசை அனிருத்.

இதையும் படிங்க - பரம்பரை மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ’நான் ஈ’ நடிகை ஹம்சா நந்தினி

2022 கோடை வெளியீடாக விக்ரம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Kamal Haasan, Lokesh Kanagaraj, Vikram