Home /News /entertainment /

12 நாட்களில் விக்ரம் படத்தின் வசூல் இத்தனை கோடியா? கலெக்சன் விபரம்

12 நாட்களில் விக்ரம் படத்தின் வசூல் இத்தனை கோடியா? கலெக்சன் விபரம்

கமலுடன் லோகேஷ் கனகராஜ்

கமலுடன் லோகேஷ் கனகராஜ்

Vikram Collection : .படம் வெளியாகி 12 நாட்கள் கடந்துள்ள நிலையிலும், கூட்டம் குறையாததால் தியேட்டர் அதிபர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    12 நாட்களில் விக்ரம் படத்துடைய கலெக்சன் விபரங்கள் வெளியாகி வியப்பை ஏற்படுத்தியுள்ளன. குறையாத கூட்டத்தால் தியேட்டர் அதிபர்களும், படக்குழுவினரும் உற்சாகம் அடைந்துள்ளார்கள்.

    கமல் தயாரிப்பில் உருவான படங்களிலேயே மிக அதிகமான வசூலை விக்ரம் படம் குவித்து வருகிறது. மல்டி ஸ்டார்களைக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டதாலும், லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்ததாலும், விக்ரம் படத்தின்  மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு காணப்பட்டது.

    இந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் படமும் அமைந்ததால் தியேட்டர்கள் ரசிகர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. படம் வெளியாகி 12 நாட்கள் கடந்துள்ள நிலையிலும், கூட்டம் குறையாததால் தியேட்டர் அதிபர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    இதையும் படிங்க - அழகில் ஹீரோயின்களை மிஞ்சும் பாடகி ஜொனிதா காந்தி 

    12வது நாளில் மட்டும் ரூ. 15 கோடி அளவுக்கு விக்ரம் வசூலித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் அடிப்படையில் படத்தின் மொத்த வசூல் ரூ. 335 கோடியை நெருங்கியுள்ளது.

    இந்த வாரமும் விக்ரம் திரைப்படம் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக ஓடும் என்பதால் படத்தின் வசூல் வரும் ஞாயிறன்று நிலவரப்படி ரூ. 400 கோடியை எட்டலாம் என்று மதிப்பிடப்படுகிறது.

    இதையும் படிங்க - ‘சினிமாடிக்கெட் விற்பனையை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும்’ - தயாரிப்பாளர்கள் கோரிக்கை 

    விக்ரம் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதால் அருண் விஜய் நடிப்பில், ஹரி இயக்கத்தில் உருவான யானை திரைப்படத்தின் வெளியீடு நாளை மறுதினம் இருந்த நிலையில், அடுத்த மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

    ’மீண்டும் உங்களை சந்திப்பேன்; என்னைப் பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம்’ – அமெரிக்கா புறப்படும் முன் டி.ஆர். கண்ணீர் மல்க பேட்டி 

    இந்த படத்தை தொடர்ந்து கமல் மகேஷ் நாராயணன் இயக்கும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். அதனை முடித்துக் கொண்டு இந்தியன் 2 படத்தில் கமல் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Published by:Musthak
    First published:

    Tags: Kamalhaasan, Vikram

    அடுத்த செய்தி