Home /News /entertainment /

விக்ரம் படம் வெளியான முதல் நாளே வசூல் குறித்து உதயநிதி ஸ்டாலின் ட்வீட்

விக்ரம் படம் வெளியான முதல் நாளே வசூல் குறித்து உதயநிதி ஸ்டாலின் ட்வீட்

கமல்ஹாசன் - உதயநிதி

கமல்ஹாசன் - உதயநிதி

Vikram Movie | கமல்ஹாசன் தயாரித்து நடித்துள்ள விக்ரம் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.

    கமல்ஹாசனின் கலைப் பயணத்தில் விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வசூல் சாதனை நிகழ்த்தும் என அப்படத்தின் விநியோகஸ்தரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    கமல்ஹாசன் தயாரித்து நடித்துள்ள விக்ரம் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. விஜய்சேதுபதி - ஃபகத் ஃபாசில் - கமலஹாசன் இணைந்து நடித்துள்ள இந்த திரைப்படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயன்ட் நிறுவனம் சார்பில் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். மேலும் சுமார் 560 சென்டர்களில் 650க்கும் அதிகமான திரையரங்குகளில் திரையிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

    Also Read : கர்ணன் படத்தை மிஞ்சிய தனுஷின் நானே வருவேன் டிஜிட்டல் விற்பனை

    இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் நடிகர் கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். அத்துடன் இன்று வெளியாக இருக்கும் விக்ரம் திரைப்படம் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதற்கான வாழ்த்துக்களை தெரிவித்தேன். இந்த திரைப்படம் கமல்ஹாசனின் கலைப் பயணத்தில் மிகப்பெரிய வசூல் சாதனையை நிகழ்த்தும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.



    ஆக்ஷன் திரில்லர் பார்முலாவில் எடுக்கப்பட்டிருக்கும் விக்ரம் திரைப்படத்திற்கு முதல் நாள் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்ததால் நல்ல வசூலை ஈட்டும் என வினியோகஸ்தர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
    Published by:Vijay R
    First published:

    Tags: Kamal Haasan, Udhayanidhi Stalin, Vikram

    அடுத்த செய்தி