அமெரிக்காவில் 500க்கும் அதிமான திரையரங்குகளில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான ஸ்க்ரீன்களில் விக்ரம் திரையிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கமல் நடித்துள்ள விக்ரம் திரைப்படம் வரும் வெள்ளியன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. இதற்கு இன்னும் 2 நாட்களே உள்ளன. இந்நிலையில், விக்ரம் படம் ஏற்படுத்திய எதிர்பார்ப்பு டைட்டில் அறிமுகம் முதல் தற்போது வரையில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
விக்ரம் படத்தில் கமலுடன், விஜய் சேதுபதி, பகத் பாசில், சிறப்பு தோற்றத்தில் சூர்யா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். மல்டி ஹீரோக்கள் படம் என்பதாலும், தொடர் வெற்றிகளைக் கொடுத்த இயக்குனர் லோகேஷின் படம் என்பதாலும் விக்ரம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் உள்ளது.
இதையும் படிங்க - 36 வருடங்களுக்கு முன்பு வெளியான கமலின் விக்ரம் வசூல் எவ்வளவு தெரியுமா?
தமிழ்நாட்டில் விக்ரமுடன் போட்டியிடும் அளவுக்கு எந்த பெரிய பட்ஜெட் படமும் வெளியாகவில்லை. கேரளா, ஆந்திராவிலும் கிட்டத்தட்ட இதேபோன்ற நிலைமைதான் நீடிக்கிறது.
வாத்தி கம்மிங் பாடலுக்கு அட்டகாச நடனமாடிய ரன்வீர் சிங்!
இவ்விரு மாநிலங்களிலும், தெலங்கானாவிலும் விக்ரம் படத்திற்கான டிக்கெட் புக்கிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆந்திரா – தெலங்கானாவில் 400க்கும் அதிகமான திரையரங்குகளில் விக்ரம் படம் திரையிடப்பட உள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவில் 500க்கும் அதிமான திரையரங்குகளில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான ஸ்க்ரீன்களில் விக்ரம் திரையிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நாள் ஒன்றுக்கு 4 ஆயிரத்திற்கும் அதிகமான காட்சிகள் இந்த தியேட்டர்களில் திரையிடப்படும்.
அமெரிக்காவில் விக்ரம் படத்தை ப்ரைம் மீடியா நிறுவனம் வெளியிடவுள்ளது.
இதை தவிர்த்து புரொமோஷன் பணிகளில் ஒன்றாக உலகின் உயரமான கட்டிடமான புர்ஜ் கலிபாவில் விக்ரம் படத்துடைய ட்ரெய்லர் நாளை திரையிடப்படவுள்ளது. இந்திய நேரப்படி இரவு 8.10க்கு ட்ரெய்லர் திரையிடப்படும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.