Home /News /entertainment /

விக்ரம் படத்தின் ரன்னிங் டைம் இதுதான்… ரசிகர்கள் திருப்தி

விக்ரம் படத்தின் ரன்னிங் டைம் இதுதான்… ரசிகர்கள் திருப்தி

விக்ரம் படத்தில் கமல்.

விக்ரம் படத்தில் கமல்.

விக்ரம் படம் வெளியாவதற்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், இன்னும் ஒரு சில தினங்களில் முன் பதிவு தொடங்கி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விக்ரம் படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. இதைப் பார்த்த ரசிகர்கள் ரன்னிங் டைம் திருப்தியாக உள்ளதென கூறி வருகின்றனர்.

விக்ரம் படம் வெளியாவதற்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், இன்னும் ஒரு சில தினங்களில் முன் பதிவு தொடங்கி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் கவுரவ தோற்றத்தில் சூர்யா நடித்திருப்பதால் இவர்களின் ரசிகர்கள் விக்ரம் படத்தை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

கடந்த வாரம் வெளியான படத்தின் ட்ரெய்லர் மற்றும் ஆடியோ ஆகியவை படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரிக்கச் செய்துள்ளன.



இதைத் தொடர்ந்து சூர்யாவின் கேரக்டர் குறித்து பேசிய கமல், அவர் கடைசி நிமிடங்களில் வருவார் என்றும், விக்ரம் 3வது பாகம் உருவாகுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறியிருந்தார்.

இதையும் படிங்க - சிறு பட்ஜெட் படங்களையும் உதயநிதி வெளியிட வேண்டும்… இயக்குனர் சீனு ராமசாமி கோரிக்கை

இந்த நிலையில் விக்ரம் படத்தின் ரன்னிங் டைம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. மொத்தமாக 173 நிமிடங்கள் அதாவது 2 மணி மற்றும் 53 நிமிடங்கள் ஓடக்கூடியதாக விக்ரம் படம் எடிட் செய்யப்பட்டுள்ளது.

கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா என முன்னணி ஹீரோக்கள் இடம் பெற்றிருப்பதால் அதிக நேரம் இருந்தால் மட்டுமே அவர்களுக்கான தகுந்த காட்சிகள் படத்தில் இடம்பெறும்.

இதையும் படிங்க - இந்தி நடிகைகள் விலகல்… ஜூனியர் என்.டி.ஆர். படத்தில் இடம்பெறுகிறாரா சாய் பல்லவி?

அந்த வகையில் விக்ரம் படம் நீளமானதாக இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் 3 மணி நேரத்திற்கு 7 நிமிடங்கள் மட்டுமே குறைவாக இருக்கும் வகையில் படம் எடிட் செய்யப்பட்டுள்ளது.



விக்ரம் படத்தின் முன்பதிவு குறித்த அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கேரளா போன்ற வெளி மாநிலங்களில் முன்பதிவு தொடங்கப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
Published by:Musthak
First published:

Tags: Kamal Haasan

அடுத்த செய்தி