ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

உலகின் மிக உயரமான ஸ்க்ரீனில் வெளியாகும் விக்ரம் படத்தின் ட்ரெய்லர்… புரொமோஷனில் புதிய உச்சம்

உலகின் மிக உயரமான ஸ்க்ரீனில் வெளியாகும் விக்ரம் படத்தின் ட்ரெய்லர்… புரொமோஷனில் புதிய உச்சம்

விக்ரம் படத்தில் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில்

விக்ரம் படத்தில் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில்

தமிழ் படத்தின் ட்ரெய்லரும் புர்ஜ் கலிபாவில் திரையிடப்படவில்லை. இந்த சாதனையை விக்ரம் படம் தொடங்கி வைத்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

உலகின் மிக உயரமான திரையான புர்ஜ் கலிபாவில் விக்ரம் படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்த வித்தைகளையும், விக்ரம் படத்தின் புரொமோஷன் டீம் களத்தில் இறக்கியுள்ளதால் ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். ஏற்கனவே ரயில் விளம்பரம் முதல், மினரல் பாட்டில் விளம்பரம் வரையில் விக்ரம் படத்தின் விளம்பரம் மக்கள் மத்தியில் நன்றாக ரீச் ஆனது.

இதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் உலகின் மிக உயரமான ஸ்க்ரீனான புர்ஜ் கலிபாவில் விக்ரம் படத்தின் ட்ரெய்லர் நாளை இரவு 8.10-க்கு திரையிடப்படுகிறது.

இதையும் படிங்க - AK61: ரசிகர் வீட்டில் அஜித்... வைரலாகும் வீடியோ!

இந்த கட்டிடம் 828 மீட்டர் உயரம் அதாவது 2,717 அடி உயரம் கொண்டதாகும். இதுவரையில் எந்த தமிழ் படத்தின் ட்ரெய்லரும் புர்ஜ் கலிபாவில் திரையிடப்படவில்லை. இந்த சாதனையை விக்ரம் படம் தொடங்கி வைத்துள்ளது.

திரையரங்குகளில் படம் வெளியாவதற்கு 2 நாட்களே உள்ளன. இந்நிலையில், விக்ரம் படம் ஏற்படுத்திய எதிர்பார்ப்பு டைட்டில் அறிமுகம் முதல் தற்போது வரையில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இதையும் படிங்க - ஆகஸ்ட் 31-ல் கார்த்தியின் விருமனுடன் மோதும் சிவகார்த்திகேயன் படம்…

ரசிகர்களை விக்ரம் படம் திருப்தி அடையச் செய்தால், தமிழ் சினிமா வசூலில் விக்ரம் புதிய உச்சத்தை அடையலாம் என சினிமா ட்ராக்கர்கள் கணித்துள்ளனர்.

தெலுங்கு வட்டாரங்களான ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் விக்ரம் திரைப்படம் 400க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது. வட மாநிலங்களிலும் கணிசமான திரையரங்குகளில் படம் வெளியாகுவதால் நல்ல வசூலை விக்ரம் ஏற்படுத்தி தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெரும்பாலான திரையரங்குகளில் முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளன. விக்ரம் படத்திற்கு போட்டியாக தமிழில் எந்த படமும் களத்தில் இல்லை என்பதால் கமலின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளார்கள்.

Published by:Musthak
First published:

Tags: Kamal Haasan, Vikram