தமிழில் மெகாஹிட் ஆகியுள்ள விக்ரம் திரைப்படம் இந்தி மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது. படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தயாரிப்பாளரும் நடிகருமான கமல்ஹாசன் ஆகியோர், சல்மான் கான், சிரஞ்சீவியை சந்தித்து பேசியுள்ள நிலையில் இந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
பான் இந்தியா மூவி என விளம்பரப்படுத்தப்பட்ட நிலையில் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் இந்தியை தவிர்த்து மற்ற மொழிகளில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
தமிழில் பிரமாண்ட வெற்றியை விக்ரம் பதிவு செய்திருப்பதால் இதனை மற்ற மொழிகளில் ரீமேக் செய்வதற்கு முன்னணி நடிகர்கள் விருப்பப்படுகின்றனர். இந்த நிலையில், ஐதராபாத்தில் விக்ரம் பட வெற்றி விழா நேற்று நடைபெற்றது.
இதன்பின்னர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தயாரிப்பாளரும் நடிகருமான கமல் ஆகியோரை வீட்டிற்கு அழைத்து தெலுங்கு மெகாஸ்டார் சிரஞ்சீவி இரவு விருந்து அளித்துள்ளார்.
What a great evening it has been! Thank You @KChiruTweets Sir for having us there ❤️ A great pleasure meeting you @BeingSalmanKhan Sir ❤️ Thank you once again @ikamalhaasan Sir ❤️ pic.twitter.com/6T0vi5z7t5
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) June 12, 2022
இந்த சந்திப்பின்போது, பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானும் உடன் இருந்துள்ளார். இந்நிலையில் தெலுங்கு மற்றும் இந்தியில் விக்ரம் படத்தை ரீமேக் செய்வது தொடர்பாக இந்த சந்திப்பின்போது பேசப்பட்டதாகவும், இதற்கு தயாரிப்பாளர் கமல் தரப்பில் சம்மதம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
ரீமேக் படங்களில் நடிப்பதில் நடிகர் சிரஞ்சீவி ஆர்வம் காட்டி வருகிறார். மலையாளத்தில் மெகா ஹிட்டான லூசிபர் திரைப்படத்தின் ரீமேக்கில் சிரஞ்சீவி தற்போது நடித்து வருகிறார்.
இதையும் படிங்க - ரோலக்ஸாக மாற்றிய மேக்அப் – டிசைனருக்கு நன்றி தெரிவித்த சூர்யா… வைரலாகும் பதிவு
இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் சல்மான் கானும் இடம் பெற்றுள்ளார். காட் ஃபாதர் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை ஜெயம் ரவியின் அண்ணனும், மூத்த இயக்குனருமான ராஜா இயக்கி வருகிறார்.
தெலுங்கு மொழியில் மட்டும் விக்ரம் திரைப்படம் ரூ. 25 கோடி வசூலை தாண்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kamalhaasan, Lokesh Kanagaraj, Salman khan, Vikram