Home /News /entertainment /

25 நாட்கள் தாண்டி வசூலில் கலக்கும் விக்ரம் படம்... தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடிகள்

25 நாட்கள் தாண்டி வசூலில் கலக்கும் விக்ரம் படம்... தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடிகள்

விக்ரம்

விக்ரம்

முதல் மூன்று நாட்கள் பெரும் வசூலை ஈட்டியதால். விக்ரம் படம் நிச்சயம் தமிழகத்தில் 100 கோடி ரூபாய் வசூலை கடந்து சாதனை படைக்கும் என சினிமா துறையினர் கணித்தனர்.

  • News18
  • Last Updated :
    கமல்ஹாசன் நடிப்பில் உருவான விக்ரம் படம் வெளியாகி 25 நாட்களை கடந்த நிலையில் தமிழகத்தில் மட்டும் 170 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளது.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரித்து நடித்த விக்ரம் திரைப்படம் ஜூன் 3-ம் தேதி வெளியானது.  இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

    விக்ரம் படம் வெளியான முதல் நாளிலிருந்தே ரசிகர்களிடம் வரவேற்பு கிடைக்க தொடங்கியது. இதன் காரணமாக ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தின் முதல் நாள் வசூலான 23 கோடி ரூபாயை நெருங்கியது. அதேபோல முதல் வார முடிவில் அண்ணாத்த, பீஸ்ட், வலிமை ஆகிய படங்களின் முதல் வசூல் சாதனையை முறியடித்தது.

    முதல் மூன்று நாட்கள் பெரும் வசூலை ஈட்டியதால். விக்ரம் படம் நிச்சயம் தமிழகத்தில் 100 கோடி ரூபாய் வசூலை கடந்து சாதனை படைக்கும் என சினிமா துறையினர் கணித்தனர். அந்த வகையில் விக்ரம் வெளியாகி 25 நட்கள் கடந்த நிலையிலும் ரசிகர்கள் வருகை குறையமால் உள்ளது. அதுவும் சென்னை போன்ற நகரங்களில் நான்காவது வார இறுதி நாட்களில் அரங்கம் நிறைந்த காட்சிகள் திரையிடப்படுகின்றன.

    Also read... கோப்ரா திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிடும் உதயநிதி

    இந்நிலையில், உலகம் முழுவதும் படம் ரூ. 400 கோடியை நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் மட்டுமே படம் ரூ. 200 கோடியை எட்டி வருகிறது. இதுவரை தமிழகத்தில் மட்டுமே படம் ரூ. 170 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல்கள் கூறப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Kamal Haasan

    அடுத்த செய்தி