ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Vikram Review : விக்ரம் படம் எப்படி இருக்கு? படத்தை பார்த்துவிட்டு ரிவ்யூ சொன்ன உதயநிதி…

Vikram Review : விக்ரம் படம் எப்படி இருக்கு? படத்தை பார்த்துவிட்டு ரிவ்யூ சொன்ன உதயநிதி…

Vikram Movie Review : விக்ரம் படத்திற்கு அதிகாலை 4 மணி காட்சிகள் தமிழகத்தின் பல்வேறு திரையரங்குகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Vikram Movie Review : விக்ரம் படத்திற்கு அதிகாலை 4 மணி காட்சிகள் தமிழகத்தின் பல்வேறு திரையரங்குகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Vikram Movie Review : விக்ரம் படத்திற்கு அதிகாலை 4 மணி காட்சிகள் தமிழகத்தின் பல்வேறு திரையரங்குகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

விக்ரம் படத்தை பார்த்து விட்டு அதற்கு விமர்சனத்தை பதிவிட்டுள்ளார் உதயநிதி ஸ்டாலின். அவரது ட்விட்டர் பதிவு வைரலாகி வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விக்ரம்’ திரைப்படம் ஜூன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இவர்களுடன் சூர்யா, அர்ஜுன் தாஸ், நரேன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கியமான துணை வேடங்களில் நடித்துள்ளனர்..

க்ளைமேக்ஸ் காட்சியின்போது சூர்யா படத்தில் இடம்பெறுவார் என்றும், இந்த காட்சி விக்ரம் படத்தின் அடுத்த பாகங்களுக்கு லீடாக அமையும் என்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க - 36 வருடங்களுக்கு முன்பு வெளியான கமலின் விக்ரம் வசூல் எவ்வளவு தெரியுமா?

விக்ரம் படத்தில் சூர்யாவின் கேரக்டர் என்ன என்பது மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. அவர் கமலின் மகன் என்றும், கமலுடன் ட்ரெய்லரில் வரும் குழந்தை சூர்யாவின் மகன் என்றும் ரசிகர்கள் யூகித்துள்ளனர்.

இதையும் படிங்க - AK61: ரசிகர் வீட்டில் அஜித்... வைரலாகும் வீடியோ!

படக்குழுவினர் சஸ்பென்ஸை தக்க வைத்திருப்பதால் படத்தின் மீதான ரசிகர்களின் ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் விக்ரம் படத்தின் விநியோகஸ்தரான உதயநிதி ஸ்டாலின், படத்தை பார்த்து விட்டு விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘விக்ரம் படம் சூப்பராக உள்ளது. இந்த அனுபவத்தை கொடுத்த கமல் சார், லோகேஷ் கனகராஜ், விஜய் சேதுபதி, பகத் பாசில், அனிருத் ஆகியோருக்கு நன்றி. இந்த படம் ப்ளாக்பஸ்டராவது உறுதி.’ என்று கூறியுள்ளார்.

உதயநிதியின் ட்வீட்டை தொடர்ந்து விக்ரம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. ஜூன் 3-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு சென்னை, ரோகினி திரையரங்கில் விக்ரம் படத்தின் முதல் நாள் முதல் காட்சியை கமல்ஹாசன் பார்க்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

First published:

Tags: Udhayanidhi Stalin, Vikram