Home /News /entertainment /

ஆந்திரா, தெலங்கானாவில் அதிக திரையரங்குகளில் ரிலீஸாகும் விக்ரம்.. முதல்நாள் முதல்காட்சிக்கு அதிக டிமாண்ட்

ஆந்திரா, தெலங்கானாவில் அதிக திரையரங்குகளில் ரிலீஸாகும் விக்ரம்.. முதல்நாள் முதல்காட்சிக்கு அதிக டிமாண்ட்

ஜூன் 3-ம்தேதி ரிலீஸாகிறது கமலின் விக்ரம்.

ஜூன் 3-ம்தேதி ரிலீஸாகிறது கமலின் விக்ரம்.

ஜூன் மாதத்தில் பெரிய பட்ஜெட் படங்கள் இல்லை என்பதால், தெலுங்கு வட்டாரத்தில் கமலின் விக்ரம் கொடி பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆந்திரா, தெலங்கானாவில் கமலில் விக்ரம் திரைப்படம் அதிக திரையரங்குகளில் வெளியிடப்படவுள்ளது. அங்கும் முதல்நாள் முதல் காட்சிக்கு அதிக டிமாண்ட் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விக்ரம் படத்தின் தெலுங்கு ட்ரெய்லரும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழில் வெளியான பத்தல பத்தல பாடல், தெலுங்கு மொழியிலும் வெளியாகி ரசிகர்களின் விருப்பத்தை பெற்று வருகிறது.

விக்ரம் படத்திற்கு யு/ஏ சென்சார் சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிடுவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இதையும் படிங்க - ஐ.பி.எல். இறுதிப் போட்டியின்போது வெளியாகும் அமீர் கான் பட ட்ரெய்லர்…

இந்நிலையில் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் சுமார் 400க்கும் அதிகமான திரையரங்குகளில் விக்ரம் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க - தனுஷ் எங்கள் மகன் என்பதில் பின்வாங்கப் போவதில்லை - மேலூர் கதிரேசன் தம்பதி

மகேஷ் பாபு நடித்துள்ள சர்காரு வாரி பாட்டா படம் கடந்த 12ம் தேதி வெளியாகி நல்ல வசூலை குவித்துள்ளது. இதன்பின்னர் பெரிய நட்சத்திரங்கள் படங்கள் ஏதும் வெளியாகவில்லை. ஜூன் மாதத்திலும் பெரிய பட்ஜெட் படங்கள் இல்லை என்பதால், தெலுங்கு வட்டாரத்தில் கமலின் விக்ரம் கொடி பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விக்ரம் தெலுங்கு ட்ரெய்லரை பார்க்க...



விக்ரம் படத்தின் தெலுங்கு வெர்ஷனுக்கும் முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட்டுகள் டிமாண்டாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

கமலுடன் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், சிறப்பு தோற்றத்தில் சூர்யா, நரேன், அர்ஜுன் தாஸ், ஹரிஷ் உத்தமன், ஆன்டனி வர்கீஸ், காயத்ரி, ஷிவானி நாராயணன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

படத்தின் புரொமோஷனுக்காக சென்னை, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் ப்ரஸ் மீட் மற்றும் விளம்பர நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
Published by:Musthak
First published:

Tags: Kamal Haasan, Vikram

அடுத்த செய்தி