ஓடிடி தளத்தில் விக்ரம் படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜுன் 3 ம் தேதி உலகம் முழுவதும் கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் வெளியாகி பிரமாண்ட வரவேற்பை பெற்று வருகிறது. கமலுடன் விஜய் சேதுபதி, பகத் பாசில், சிறப்பு தோற்றத்தில் சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைத்திருக்கும் இப்பட பாடல்கள் அனைத்துமே செம ஹிட். தற்போது படம் வசூலிலும் நல்ல வேட்டை நடத்தி வருகிறது.
இந்நிலையில் கமல் நடித்த படங்களிலேயே முதல் நாளில் மிக அதிகமான வசூலை விக்ரம் குவித்துள்ளது. தமிழ் நாட்டில் அதிக அளவுக்கு விக்ரம் படம் கலெக்சனை அள்ளியிருப்பதாக தகவல்கள் தெரிவித்தன.
Also read... தந்தையர் தினத்தை முன்னிட்டு தனுஷ் வெளியிட்ட ‘திருச்சிற்றம்பலம்’ க்ளிம்ப்ஸ் வீடியோ!
விக்ரம் வெளியாகி 19 நாட்களை கடந்துவிட்ட நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் 150 கோடியை விக்ரம் வசூலித்துள்ளது. இதன் மூலம் 'பாகுபலி 2' படத்தின் மொத்த வசூலை 'விக்ரம்' முறியடித்துள்ளது.
மூன்றாவது வாரமாக வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் இப்படமானது, தற்போதுவரை உலக அளவில் 350 கோடியை வசூலித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் விக்ரம் திரைப்படம் ஜூலை 8-ம்தேதி முதல் ஒளிபரப்பாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க - பீஸ்ட் சாதனையை முறியடிக்குமா வாரிசு ஃபர்ஸ்ட் லுக்? புயல் வேகத்தில் லைக் – ரீ ட்வீட்
மல்டி ஸ்டார்களைக் கொண்டு எடுக்கப்பட்ட, பக்கவான திரைக்கதையைக் கொண்டுள்ள விக்ரம், ரூ. 500 கோடி வரை வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய் நடிக்கவுள்ள 67வது படத்தை இயக்குகிறார். அதன்பின்னர், விக்ரம் படத்தின் அடுத்த பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கமல் அடுத்ததாக மகேஷ் நாராயணன் இயக்கவுள்ள ஒரு படத்தில் நடிக்கிறார். இடையே, பா.ரஞ்சித் இயக்கத்தில் கமல் நடிப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த படங்களைத் தொடர்ந்து அவர் இந்தியன் 2 பட ஷூட்டிங்கில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.