விக்ரம் படத்தின் ப்ரஸ் மீட்டுகளில் தனியொருவனாக கமல் மட்டுமே பங்கேற்று வருவது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
4 ஆண்டுகளுக்கு பின்னர் திரைக்கு வரும் கமலின் விக்ரம், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த வாரம் வெள்ளியன்று இந்த படம் உலகம் முழுவதும் ரிலீசாகிறது.
மல்டி ஹீரோக்கள் நடித்திருப்பதால் விக்ரம் படத்தின FDFS முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட்டுகளுக்கு அதிக டிமாண்ட் இருப்பதாக திரையரங்க உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க - காட்டுவாசி லுக்கில் பிறந்தநாளை கொண்டாடிய ராய் லட்சுமி.. ஏன் தெரியுமா ?
கமலுடன் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், சிறப்பு தோற்றத்தில் சூர்யா, நரேன், அர்ஜுன் தாஸ், ஹரிஷ் உத்தமன், ஆன்டனி வர்கீஸ், காயத்ரி, ஷிவானி நாராயணன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில் படத்தின் புரொமோஷனுக்காக சென்னை, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் ப்ரஸ் மீட் மற்றும் விளம்பர நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
இதையும் படிங்க - சிறிய முதலீட்டில் மாபெரும் வசூல்... 300 சதவீதம் லாபம் சம்பாதித்த காத்து வாக்குல ரெண்டு காதல்!
இதில் கமல்ஹாசன் மட்டுமே பங்கேற்று வருகிறார். அதிகபட்சமாக சென்னையில் நடந்த ப்ரஸ் மீட்டில் லோகேஷ் கனகராஜ் பங்கேற்றார். நேற்று டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் கமல் சோலோவாக பங்கேற்றார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் விக்ரம் வெளியாகவுள்ளது. விக்ரம் பான் இந்தியா படம் என்று பரவலாக பேசப்படுகிறது.
இந்நிலையில் புரொமோஷனில் கமலை தவிர்த்து மற்ற யாரும் பங்கேற்காதது கேள்வியையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி வருகிறது. இதற்கு முன்பாக வெளிவந்த பான் இந்தியா திரைப்படமாக கருதப்பட்ட ஆர்ஆர்ஆர், கேஜிஎஃப் 2 படங்களின் புரொமோஷன் நடந்தன.
அப்போது படத்தில் இடம்பெற்ற கலைஞர்கள் பெரும்பாலானோர் அதில் கலந்து கொண்டனர். ஆனால் விக்ரம் பட புரொமோஷனில் தனியொருவனாக கமல் மட்டுமே பங்கேற்று வருகிறார்.
ஒருவேளை கமலைத் தவிர்த்து மற்ற எல்லோரும் பிஸியாக உள்ளார்களா அல்லது தவிர்க்கப்பட்டார்களா அல்லது கமல் மட்டுமே முன்னிலைப் படுத்தப்படுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.