ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

மலேசியா எதிர்க்கட்சி தலைவரை ஈர்த்த கமலின் ‘விக்ரம்’… படக்குழுவுக்கு வாழ்த்து

மலேசியா எதிர்க்கட்சி தலைவரை ஈர்த்த கமலின் ‘விக்ரம்’… படக்குழுவுக்கு வாழ்த்து

மலேசியா எதிர்க்கட்சி தலைவர் அன்வர் இப்ராகிமுடன் கமல்.

மலேசியா எதிர்க்கட்சி தலைவர் அன்வர் இப்ராகிமுடன் கமல்.

Vikram Movie : மலேசியா நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் அன்வர் இப்ராகிம் விக்ரம் படத்தை பாராட்டி பதிவிட்டிருப்பது கமல் ரசிகர்களை உற்சாகம் அடைய வைத்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

விக்ரம் படத்தின் புரொமோஷனுக்காக மலேசியாவுக்கு சென்ற கமல், அங்கு அந்நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் அன்வர் இப்ராகிமை சந்தித்து பேசினார். விக்ரம் படம் தன்னை கவர்ந்திருப்பதாகவும், அதனை தியேட்டருக்கு சென்று பார்க்கப் போவதாகவும் அன்வர் இப்ராகிம் கூறியுள்ளார்.

கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படம் இன்னும் 2 நாட்களில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இதையொட்டி நேற்று முன்தினம் டிக்கெட் புக்கிங் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.

கமல், சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாசில் என ரசிகர்கள் மனம் கவர்ந்த ஹீரோக்கள் ஒரே படத்தில் இடம்பெற்றுள்ளனர். மேலும், மாநகரம், கைதி, மாஸ்டர் வெற்றிப் படங்களை அளித்த லோகேஷ் கனகராஜ் இதனை இயக்கியுள்ளதால், எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க - கதாநாயகனாக... குணச்சித்திர நடிகராக... வில்லனாக... தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர் எஸ்.ஜே.சூர்யா!

ரசிகர்களை விக்ரம் திருப்தி செய்தால், இந்த படத்தின் வசூல் தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க ஒன்றாக அமையும். இதற்கிடையே, படத்தின் புரொமோஷன் பணிகளில் கமல் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகிறார்.

மலேசியா சென்ற கமல் அங்கு அந்நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் அன்வர் இப்ராகிமை சந்தித்து பேசினார். இருவரும் இந்திய சினிமா, அரசியல், சமூக பிரச்னைகள் குறித்து நீண்ட நேரம் உரையாடினர். கமலுக்கு மதிய விருந்தை அளித்த அன்வர் இப்ராகிம், விக்ரம் படம் தன்னை கவர்ந்திருப்பதாகவும், தியேட்டருக்கு சென்ற அதனை பார்ப்பேன் என்றும் ட்விட்டரில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க -  ஜூன் மாதம் ஒடிடியில் வெளியாக உள்ள மாஸ் படங்கள்... இதோ லிஸ்ட்!

இதற்கு கமல் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார். மலேசியா நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் விக்ரம் படத்தை பாராட்டி பதிவிட்டிருப்பது கமல் ரசிகர்களை உற்சாகம் அடைய வைத்துள்ளது.

விக்ரம் ட்ரெய்லரைப் பார்க்க...

' isDesktop="true" id="752918" youtubeid="OKBMCL-frPU" category="cinema">

வரும் வெள்ளியன்று கமலின் விக்ரம் உலகம் முழுவதும் வெளியிடப்படுகிறது.

First published:

Tags: Kamal Haasan, Vikram