Home /News /entertainment /

விக்ரம் படத்திலிருந்து ‘போர்க்கண்ட சிங்கம்’ பாடல் ரிலீஸ்… கேட்கும்போதே கண் கலங்குவதாக ரசிகர்கள் கமென்ட்…

விக்ரம் படத்திலிருந்து ‘போர்க்கண்ட சிங்கம்’ பாடல் ரிலீஸ்… கேட்கும்போதே கண் கலங்குவதாக ரசிகர்கள் கமென்ட்…

போர்க்கண்ட சிங்கம் பாடல் காட்சியில் கமல்

போர்க்கண்ட சிங்கம் பாடல் காட்சியில் கமல்

விக்ரம் படத்திற்கு சென்சார் போர்டு யு/ஏ சான்றிதழை வழங்கியுள்ளது. 2 மணி நேரம் 53 நிமிடங்கள் ஓடக் கூடியதாக விக்ரம் படம் எடிட் செய்யப்பட்டுள்ளது.

விக்ரம் படத்திலிருந்து எமோஷனல் பாடலாக போர் கண்ட சிங்கம் இன்று வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.

ஏற்கனவே விக்ரம் படத்திலிருந்து கமலின் குரலில் பத்தல பத்தல பாடல் வெளியாகி மெகா ஹிட்டாகி இருந்தது. இந்நிலையில் போர்கண்ட சிங்கம் இரண்டாவது பாடலாக வெளிவந்துள்ளது.

இந்த பாடலை கேட்கும்போதே கண்கள் கலங்குவதாக நெட்டிசன்கள் கமென்ட் செய்து வருகின்றனர். பத்தல பத்தல பாடலில் கெத்தான வரிகள், அலட்டிக் கொள்ளாத நடனம் மூலம் கமல் மாஸ்ஸாக காட்சியளித்தார். ஆனால் அதற்கு அப்படியே மாற்றமாக போர்கண்ட சிங்கம் பாடலில் சோக உணர்வுகளை கமலை மழையாய் பொழிந்திருக்கிறார்.

இதையும் படிங்க - கார்த்தியின் சர்தார் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு… போலீஸ் கேரக்டர் போஸ்டர் வெளியீடு

கேட்டவர்களுக்கு உடனடியாக பிடித்துள்ள இந்த பாடல் தற்போது லைக்ஸ், ஷேர்களை குவித்து வருகிறது.

இதையும் படிங்க - தனுஷின் ஹாலிவுட் படமான ‘தி கிரே மேன்’ ட்ரெய்லர் வெளியீடு… உற்சாகத்தில் ரசிகர்கள்

போர்கண்ட சிங்கம் பாடலின் வழியே விக்ரம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அதிகப் படுத்தி உள்ளார்.



அதேபோன்று என்ன மாதிரியான கதைக் களம் என்பதை யூகிக்க முடியாத வகையில், போர்கண்ட சிங்கம் பாடல் ட்விஸ்டை ஏற்படுத்தியிருக்கிறது.

அனிருத் இசையில் இந்த பாடலை விஷ்ணு எடாவன் எழுத ஜி ரவி பாடியுள்ளார். விஷ்ணு எடாவன் விக்ரம் படத்தில் இணை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.





பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படம் அடுத்த மாதம் 3ம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

போர்கண்ட சிங்கம் பாடலை யூடியூபில் பார்க்க..



இந்த படத்திற்கு சென்சார் போர்டு யு/ஏ சான்றிதழை வழங்கியுள்ளது. 2 மணி நேரம் 53 நிமிடங்கள் ஓடக் கூடியதாக விக்ரம் படம் எடிட் செய்யப்பட்டுள்ளது.

விக்ரம் படத்தில் மல்டி ஹீரோக்கள் இடம்பெற்றுள்ளதாலும், சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதாலும் இந்த படம் அட்வான்ஸ் புக்கிங்கில் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Published by:Musthak
First published:

Tags: Kamal Haasan, Vikram

அடுத்த செய்தி