திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் விக்ரம் திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே தியேட்டர்களில் திரும்ப திரும்ப பார்த்து வரும் ரசிகர்கள் ஓடிடி தளத்திலும் அதிக எண்ணிக்கையில் பார்த்து ரசிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கமல், சூர்யா, பகத் பாசில், விஜய்சேதுபதி என மல்டி ஸ்டார்களைக் கொண்டு உருவான விக்ரம் திரைப்படம் கடந்த 3ம் தேதி வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. 4 வாரங்களைக் கடந்த நிலையில் வார இறுதி நாட்களில் இந்தப் படம் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடுகிறது.
உலக அளவில் இந்தப் படம் ரூ. 400 கோடி வசூலை எட்டிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தியேட்டர் ரிலீஸில் மட்டும் சுமார் ரூ. 500 கோடியை விக்ரம் எட்டக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மோகன்லால் ரோலில் ரஜினிகாந்த்.. பிருத்வி ராஜ் சொன்ன பளீச் பதில்!
இந்த நிலையில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் விக்ரம் திரைப்படம் அடுத்த மாதம் 8ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாயகன் மீண்டும் வரார்.. 🔥😎 #Vikram Streaming from July 8 on #DisneyplusHotstar #VikramOnDisneyplusHotstar @ikamalhaasan @Dir_Lokesh @anirudhofficial @VijaySethuOffl #FahadhFaasil @Suriya_offl @Udhaystalin #Mahendran @RKFI @turmericmediaTM @SonyMusicSouth @RedGiantMovies_ pic.twitter.com/QUey20zavP
— Disney+ Hotstar Tamil (@disneyplusHSTam) June 29, 2022
இதுதொடர்பாக துப்பாக்கிகளுடன் கமல் தோன்றும் புரொமோ ஒன்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
The eagle is coming !
Streaming from July 8th on#VikramonDisneyplusHotstar #Ulaganayagan #KamalHaasan
#Vikram https://t.co/HGAVoJ7dMY
— Raaj Kamal Films International (@RKFI) June 29, 2022
விக்ரம் படத்தை தொடர்ந்து கமல் அடுத்ததாக மகேஷ் நாராயணன் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் நடிப்பதற்கு மம்மூட்டியுடன் பேசப்பட்டதாகவும், அவரும் கமலுடன் நடிப்பதற்கு சம்மதித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக கேரளாவில் விக்ரம் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசியிருந்த கமல், மம்மூட்டி சம்மதித்தால் அவருடன் இணைந்து நடிப்பதற்கு தயார் என்று கூறியிருந்தார்.
மீனாவின் கணவர் வித்யாசாகர் மறைவு - ஆறுதல் கூறிய ரஜினிகாந்த்...
மகேஷ் நாராயணன் உடனான படத்தை முடித்துக் கொண்டு இந்தியன் 2 படத்தில் கமல் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விக்ரம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், விஜய்யின் தளபதி 67 படத்திற்கான பணிகளை தொடங்கியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kamalhaasan, OTT Release, Vikram