Home /News /entertainment /

சூர்யா, கமல் ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்… விக்ரம் ஒரிஜினல் பி.ஜி.எம். இன்று வெளியாகிறது

சூர்யா, கமல் ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்… விக்ரம் ஒரிஜினல் பி.ஜி.எம். இன்று வெளியாகிறது

கமல் - சூர்யா

கமல் - சூர்யா

Vikram OST : கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா என ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு காட்சிகளுக்கும் வெவ்வேறு விதமான பின்னணி இசையை அனிருத் அமைத்திருப்பார்.

    விக்ரம் படத்துடைய ஒரிஜினல் சவுண்ட் ட்ராக் (OST) எனப்படம் படத்தின் ஒரிஜினல் பி.ஜி.எம். இன்று வெளியாகிறது.

    கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த மாதம் 3-ம் தேதி விக்ரம் திரைப்படம் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது. படம் வெளியாகி ஒரு மாதம் கடந்த பின்னரும், இன்றளவும் கூட, வார இறுதி நாட்களில் விக்ரம் படம் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.

    இயக்கம், இசை, சண்டைக்காட்சிகள், எடிட்டிங், கேமரா என அனைத்து டிபார்ட்மெண்ட்களும் வேற லெவலில் பணியாற்றியதால் படம் இத்தகைய பிரம்மாண்ட வெற்றியை பெற்றது.

    குறிப்பாக விக்ரம் படத்தில் இடம் பெற்ற, பின்னணி இசை படத்திற்கு பெரும் பலமாக அமைந்தது. அனிருத் இசையில் வெளியான விக்ரம் படத்தின் பாடல்களும், பின்னணி இசையும், ரசிகர்களை அதிகம் ஈர்த்தன.

    இதையும் படிங்க - அருண் விஜயின் யானை படத்தில் 5 நிமிட காட்சி நீக்கம்?

    கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா என ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு காட்சிகளுக்கும் வெவ்வேறு விதமான பின்னணி இசையை அனிருத் அமைத்திருப்பார்.

    இதற்கிடையே படத்தின் ஒரிஜினல் பின்னணி இசை எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் காணப்பட்டது. இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு விக்ரம் படத்தின் ஒரிஜினல் சவுண்ட் டிராக் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.



    இதனால் சூர்யா மற்றும் கமல் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முன்பு விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்திலும், அனிருத்தின் பின்னணி இசை அதிகம் பேசப்பட்டது. சுமாரான திரைக்கதை கொண்ட இந்த படத்திற்கு அனிருத் போட்ட பிஜிஎம் மிகப்பெரும் பலமாக அமைந்தது என்று விஜய் ரசிகர்களே கூறியிருந்தனர்.

    இதையும் படிங்க - ‘லொகேஷன் அனுப்புங்க இளவரசி… கடிதம் தர வேண்டும்’ - த்ரிஷாவை கலாய்க்கும் கார்த்தி…

    அனிருத் தற்போது இந்தி திரையுலகில் நுழைந்துள்ளார். பாலிவுட்டில் அட்லி இயக்கம் ‘ஜவான்’ படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், நயன்தாரா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஜவான் படத்தில் வில்லனாக நடிப்பதற்கு விஜய் சேதுபதியிடம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
    Published by:Musthak
    First published:

    Tags: Actor Suriya, Kamalhaasan, Vikram

    அடுத்த செய்தி