சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் விக்ரம் படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
கமல், லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படம் ஜூன் 3ம் தேதி திரைக்கு வருகிறது. இதையொட்டி, படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது வரை விக்ரம் படத்திலிருந்து டைட்டில் டீசர், கிளிம்ஸ், ட்ரெய்லர், 2 லிரிக்கல் வீடியோ பாடல்கள் உள்ளிட்டவை வெளியிடப்பட்டுள்ளன. இவற்றில் பாடல்களும், ட்ரெய்லரும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
இதையும் படிங்க - விக்ரம் படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிட தடை… சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய கமல், 4 ஆண்டுகளுக்கு பின்னர் படத்தை அளிப்பதற்காக ரசிகர்களிடம் வருத்தம் தெரிவிப்பதாக கூறினார். விக்ரம் படத்தின் அடுத்த பாகங்கள் உருவாகும் என்று கூறிய கமல், அதனையும் லோகேஷ் கனகராஜ் தான் இயக்குவார் என்று தெரிவித்தார்.
சிறிய முதலீட்டில் மாபெரும் வசூல்... 300 சதவீதம் லாபம் சம்பாதித்த காத்து வாக்குல ரெண்டு காதல்
விக்ரம் படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிடோர் நடித்துள்ளனர். சிறப்பு தோற்றத்தில் சூர்யா இடம்பெற்றுள்ளார். இவரது கேரக்டர் குறித்த தகவல்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளன.
இந்நிலையில் விக்ரம் படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தேதி நாளை மறுதினமான ஞாயிற்றுக் கிழமை ஜூன் 29-ம்தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் விக்ரம் படத்தின் முல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட்டுகளுக்கு அதிக டிமாண்ட் ஏற்பட்டுள்ளது.
விக்ரம் படத்தின் புரொமோஷனையொட்டி பஞ்ச தந்திரம் படத்தில் கமலின் நண்பர்களாக இடம்பெற்ற ஜெய்ராம், ரமேஷ் அரவிந்த், ஸ்ரீமன், யூகி சேது ஆகியோர் நடிப்பில் புதிய புரொமோ வெளியாகியுள்ளது.
ப்ரொமோவை பார்க்க...
பெரும்பாலான ரசிகர்களை ரசிக்க வைக்கும் இந்த புரொமோ தற்போது வைரலாகியுள்ளது. வேற வெலலில் கிரியேட்டிவ் இருப்பதாக நெட்டிசன்கள் இந்த வீடியோவுக்கு கமென்ட் செய்து வருகின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.