Home /News /entertainment /

விக்ரம் படத்திற்காக மீண்டும் இணைந்த ‘பஞ்ச தந்திரம்’ கூட்டணி… வைரலாகும் சூப்பர் ப்ரொமோ

விக்ரம் படத்திற்காக மீண்டும் இணைந்த ‘பஞ்ச தந்திரம்’ கூட்டணி… வைரலாகும் சூப்பர் ப்ரொமோ

விக்ரம் புரொமோவில் இடம் பெற்றுள்ள பஞ்சதந்திர படத்தின் காட்சி.

விக்ரம் புரொமோவில் இடம் பெற்றுள்ள பஞ்சதந்திர படத்தின் காட்சி.

பஞ்ச தந்திரம் படத்தில் கமலின் நண்பர்களாக ஜெயராம், ரமேஷ் அரவிந்த், ஸ்ரீமன், யூகி சேது ஆகியோர் இடம்பெற்று வேற லெவலில் காமெடி செய்திருப்பார்கள்.

விக்ரம் படத்திற்காக பஞ்ச தந்திரத்தில் கமலின் நண்பர்களாக நடித்த ஜெயராம், ரமேஷ் அரவிந்த் உள்ளிட்டோர் புதிய ப்ரொமோவில் நடித்துள்ளனர். இந்த வீடியோ அதிக விருப்பங்களை பெற்று வருகிறது.

கமலின் சினிமா கெரியரில் பஞ்ச தந்திரம் திரைப்படம் முக்கியமான ஒன்றாக அமைந்தது. கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் 2002-ல் வெளிவந்த இந்த திரைப்படம் ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருப்பார். நண்பர்களாக ஜெயராம், ரமேஷ் அரவிந்த், ஸ்ரீமன், யூகி சேது ஆகியோர் இடம்பெற்று வேற லெவலில் காமெடி செய்திருப்பார்கள்.

இதையும் படிங்க - விஜய்யின் ‘தளபதி 66’ முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு… வைரலாகும் போஸ்டர்

பஞ்ச தந்திரம் படத்தில் கமலுடன் அவரது நண்பர்கள் போனில் பேசும் காட்சி மிகவும் ரசிக்கப்பட்டது. அதே ஸ்டைலில் விக்ரம் படத்திற்கு புதிய ப்ரொமோ ஒன்றை உருவாக்கியுள்ளார்கள்.

மிகவும் கிரியேட்டிவாக உருவாக்கப்பட்ட இந்த ப்ரொமோ அதிக விருப்பங்களை பெற்று வருகிறது.

 

ப்ரொமோவை பார்க்க…



கமல் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படம் அடுத்த வாரம் வெள்ளியன்று ஜூன் 3ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.





கமலுடன் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், சிறப்பு தோற்றத்தில் சூர்யா, நரேன், அர்ஜுன் தாஸ், ஹரிஷ் உத்தமன், ஆன்டனி வர்கீஸ், காயத்ரி, ஷிவானி நாராயணன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

இதையும் படிங்க - இயக்குனர் பாலா குறித்த சர்ச்சைக்கு முடிவுகட்டிய சூர்யா… வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் ஃபோட்டோ

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் விக்ரம் வெளியாகவுள்ளது. விக்ரம் பான் இந்தியா படம் என்று பரவலாக பேசப்படுகிறது.

தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் கமல் படத்தின் முதல் நாள் முதல் காட்சி டிக்கெட்டிற்கு அதிக டிமாண்ட் உள்ளது. ஞாயிறு முதல் ஆன்லைன் ஆஃப்லைன் டிக்கெட் புக்கிங் தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Published by:Musthak
First published:

Tags: Kamal Haasan, Vikram

அடுத்த செய்தி