Home /News /entertainment /

கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கு - மகான் குறித்து துருவ் விக்ரம்

கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கு - மகான் குறித்து துருவ் விக்ரம்

மகான் - துருவ் விக்ரம்

மகான் - துருவ் விக்ரம்

மகான் திரைப்படத்தை அதிகம் பேர் பார்த்து ஆதரவு தர வேண்டிய பொறுப்பு இப்போது ரசிகர்கள் உடையதாகிறது.

மகான் படம் பல வகைகளில் முக்கியமானது. விக்ரமும் அவரது மகன் துருவ் விக்ரமும் இணைந்து நடித்திருக்கும் முதல் திரைப்படம்.

துருவ் விக்ரம் அறிமுகமான ஆதித்ய வர்மா சரியாகப் போகாத நிலையில் இந்த இரண்டாவது படம் ஓடிடி யில் வெளியாவது யாருக்குமே வேதனை தரக்கூடிய விஷயம். இதுகுறித்து துருவ் விக்ரம் முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.மகான் திரைப்படத்தை நானும் அப்பாவும் சில ரசிகர்களுடன் சேர்ந்து பார்த்தோம். அந்த அனுபவம் மறக்க முடியாதது.

இந்தப் படத்தை ரசிகர்கள் திரையரங்கில் பார்க்க முடியாது என்பது கசப்பான உணர்வுதான். மகான் நல்லபடியாக வரவேற்பைப் பெற்றால் அப்பாவுடன் இணைந்து இன்னொரு படம் நடிப்பேன். முக்கியமாக திரையரங்கில் வெளியிடுவதற்காக என்று துருவ் விக்ரம் கூறியிருக்கிறார். மகான் திரைப்படம் ஆக்ஷன் அதிரடியுடன் தயாராகியிருக்கிறது.

இதையும் படிங்க.. அர்ச்சனாவின் ஆட்டத்துக்கு முடிவு கட்டும் சரவணன்.. ராஜா ராணி 2-வில் உச்சக்கட்ட பரபரப்பு!

கார்த்திக் சுப்பராஜ் படத்தை இயக்கி இருக்கிறார். அவரது முந்தைய திரைப்படம் ஜகமே தந்திரம் சரியாக போகாததால் தயாரிப்பாளர் முன்னெச்சரிக்கையுடன் மகானை ஒடிடியில் தள்ளி விட்டார் என்றே படவுலகில் பேசிக்கொள்கின்றனர். இந்த முடிவில் விக்ரமுக்கும், துருவ் விக்ரமுக்கும் துளியும் உடன்பாடு இல்லை. அதற்காக விக்ரம் ரசிகர்கள் கவலைப்பட வேண்டாம். மகான் வரவேற்பைப் பெற்றால் விக்ரமும் அவரது மகனும் இன்னொரு திரைப்படத்தில் இணைந்து நடிப்பார்கள் என்ற உத்தரவாதத்தை துருவ் விக்ரமே அளித்திருக்கிறார்.

இதையும் படிங்க.. இதுக்கு பேரு தான் ட்விஸ்ட்.. டைவர்ஸ் பேப்பருடன் பாக்கியாவை சந்திக்கும் கோபி!

அந்தவகையில் மகான் திரைப்படத்தை அதிகம் பேர் பார்த்து ஆதரவு தர வேண்டிய பொறுப்பு இப்போது ரசிகர்கள் உடையதாகிறது. வரும்  10 ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் மகான் திரைப்படம் வெளியாகிறது.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sreeja
First published:

Tags: Dhruv Vikram, Kollywood

அடுத்த செய்தி