Home /News /entertainment /

யூடியூபில் 50 மில்லியன் பார்வைகளைக் கடந்த விக்ரம் பட பாடல்…

யூடியூபில் 50 மில்லியன் பார்வைகளைக் கடந்த விக்ரம் பட பாடல்…

விக்ரம் படத்தில் கமல்

விக்ரம் படத்தில் கமல்

Pathala Pathala Song : கமல் பாடிய பாடல் மிகப் பெரும் வரவேற்பை பெற்று இருப்பதால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

    விக்ரம் படத்தில் இடம்பெற்ற பத்தல பத்தல பாடல் யூடியூபில் 50 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.

    கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான விக்ரம் திரைப்படம் கடந்த 3ம் தேதி வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

    இந்த படத்தில் கமலுடன் பகத் பாசில், விஜய் சேதுபதி, சிறப்பு தோற்றத்தில் சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 2 மணி நேரம் 50 நிமிடங்களுக்கு விக்ரம் படம் ஓடினாலும் சலிப்பை ஏற்படுத்தாத வகையில் விறுவிறுப்பாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    பெரும்பாலான சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருப்பதால் ரிப்பீட் ஆடியன்ஸ் இந்த படத்திற்கு அதிகம் உருவாகியுள்ளார்கள். 10 நாட்களை விக்ரம் திரைப்படம் கடந்துள்ள நிலையில் ரூ. 300 கோடிக்கும் அதிகமாக உலகம் முழுவதும் படம் வசூலித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதையும் படிங்க - கார்த்தி திரைப்படத்தை கைப்பற்றிய உதயநிதி ஸ்டாலின்

    இந்த நிலையில் படத்தில் இடம்பெற்ற பத்தல பத்தல என்ற பாடல் யூடியூபில் 50 மில்லியன் பார்வையை கடந்து சாதனை படைத்துள்ளது. திரைப்படத்தில் ஓப்பனிங் சாங்காக இடம் பெற்ற இந்தப் பாடலுக்கு தியேட்டரில் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு காணப்பட்டது.

    கமல்ஹாசன் எழுதி பாடியிருக்கும் இந்த பாடலின் லிரிக்கல்  வீடியோ விக்ரம் படத்திலிருந்து முதல் பாடலாக வெளியானது. கமல் பாடிய பாடல் மிகப் பெரும் வரவேற்பை பெற்று இருப்பதால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

    பாடலை பார்க்க...



    இதேபோன்று விக்ரம் படமும் மிகப் பெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த படம் இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் ரீமேக் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



    எதிர்பாராத வெற்றியை விக்ரம் திரைப்படம் கொடுத்ததால் நடிகரும் படத்தின் தயாரிப்பாளருமான கமல்ஹாசன் உற்சாகத்தில் இருக்கிறார். அவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜூக்கு லெக்சஸ் என்ற சொகுசு காரை பரிசளித்துள்ளார்.

    விக்ரம் படத்தில் சூர்யா நடித்த ரோலக்ஸ் என்ற கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. சில நிமிடங்கள் திரையில் தோன்றினாலும் சினிமா ரசிகர்களின் மனதில் சூர்யா இடம்பிடித்துவிட்டார். அவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ரோலக்ஸ் வாட்ச்சை கமல்ஹாசன் பரிசளித்தார்.

    இதையும் படிங்க - என்னுடைய 19 வயதில் இது நடக்கும் என நினைக்கவில்லை.. யாஷிகா போட்ட பதிவு!

    விக்ரம் படத்திற்காக விக்ரம் படத்திற்காக சூரியா எந்தவித சம்பளமும் இல்லாமல் நடித்துக் கொடுத்துள்ளார். இதனை தன் மீது கொண்ட அன்பு காரணமாக சூர்யா செய்தார் என்று கமல் தனது வீடியோ பதிவில் குறிப்பிட்டு இருந்தார். அடுத்த சில படங்களுக்கு பின்னர் விக்ரம் படத்துடைய அடுத்த பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .
    Published by:Musthak
    First published:

    Tags: Kamalhaasan, Vikram

    அடுத்த செய்தி