Home /News /entertainment /

‘100 ஆண்டு தமிழ் சினிமா வரலாற்றில் அதிக வசூலைப் பெற்ற படம் விக்ரம்’

‘100 ஆண்டு தமிழ் சினிமா வரலாற்றில் அதிக வசூலைப் பெற்ற படம் விக்ரம்’

விக்ரம்

விக்ரம்

விக்ரம் படத்தின் மெகா வெற்றியைத் தொடர்ந்து இந்த படத்தின் அடுத்த பாகம் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
‘100 ஆண்டு தமிழ் சினிமா வரலாற்றில் அதிக வசூலைப் பெற்ற படம் விக்ரம்’  என்று தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் சக்தி சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘விக்ரம்’ திரைப்படம் கடந்த ஜூன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

இவர்களுடன் சூர்யா, அர்ஜுன் தாஸ், நரேன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கியமான துணை வேடங்களில் இடம்பெற்றிருந்தனர். இப்படம் நான்கு வெவ்வேறு மொழிகளில் வெளியாகியது.

பட வாய்ப்புகள் இல்லாததால் எடை அதிகரித்த இனியா?

படம் வெளியாகி ரசிகர்களிடமும், சினிமா ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பையும் விமர்சனங்களையும் பெற்றது. நீண்ட நாட்களுக்குப் பிறகு தனது படம் மாபெரும் வெற்றி பெற்றதால் மிகுந்த உற்சாகமடைந்தார் கமல் ஹாசன். அதோடு விக்ரம் திரைப்படம் 450 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றது.

தற்போது படம் 100 நாட்களைக் கடந்துள்ளது. இந்நிலையில் 100 ஆண்டுகால தமிழ் சினிமா வரலாற்றில் அதிக வசூலைப் பெற்ற படம் விக்ரம்தான் என்று தமிழ்நாடு தியேட்டர்கள் உரிமையாளர்கள் சங்க தலைவர் சக்தி சுப்ரமணியம் கூறியுள்ளார்.

சிம்புவின் வெந்து தணிந்தது காடு விஜய் படத்தின் காப்பியா? ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்

இதுதொடர்பாக அவர் கோவையில் நடைபெற்ற விக்ரம் 100வது நாள் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியதாவது-

கமலின் விக்ரம் திரைப்படம் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. திரையரங்க உரிமையாளர்களுக்கு நல்ல லாபத்தை இந்தப் படம் பெற்றுத் தந்தது.

தமிழ் சினிமா தற்போது 100 ஆண்டுகால தமிழ் சினிமா வரலாற்றில் அதிக வசூலைக் குவித்த நம்பர் ஒன் திரைப்படம் விக்ரம் தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

விக்ரம் படத்தின் மெகா வெற்றியைத் தொடர்ந்து இந்த படத்தின் அடுத்த பாகம் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
Published by:Musthak
First published:

Tags: Kamal Haasan, Vikram

அடுத்த செய்தி