புக் மை ஷோ (Book My Show)டிக்கெட் தளத்தில் கமலின் விக்ரம் படம் அதிக விருப்பங்களை பெற்று சாதனை படைத்துள்ளது. கே.ஜி.எஃப். 2 படத்திற்கு நிகராக விக்ரம் படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டியுள்ளனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படம் அடுத்த மாதம் 3ம் தேதி வெள்ளிக்கிழமையன்று திரையரங்குகளில் வெளியாகிறது. ஏற்கனவே கமல் தயாரித்து நடித்த விக்ரம் திரைப்படம் 1986ல் வெளிவந்து சாதனை படைத்தது. அதே டைட்டில் தற்போது பயன்படுத்தப்பட்டுள்ளது.
விக்ரம் படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சிறப்பு தோற்றத்தில் சூர்யா இடம்பெற்றுள்ளார்.
இதையும் படிங்க - விஜய் தேவரகொண்டா சமந்தாவுக்கு காயமில்லை... விபத்து செய்தியை மறுத்த குஷி படக்குழு
மல்டி ஹீரோக்கள் இடம்பெற்றுள்ளதாலும், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாநகரம், கைதி, மாஸ்டர் என தொடர்ச்சியாக ஹிட் படங்களைக் கொடுத்ததாலும் விக்ரம் படத்தின் மீது ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டியுள்ளனர்.
இதையும் படிங்க - புதுப்பேட்டை 2ம் பாகம் உருவாகுமா? செல்வராகவன் பதில்
இந்நிலையில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் தளமான புக் மை ஷோ Book My Show இணையதளத்தில் விக்ரம் படத்தை பார்ப்பதற்கு 2 கோடிக்கும் அதிகமானோர் அதாவது 20 மில்லியனுக்கும் அதிகமானோர் விருப்பம் தெரிவித்துள்ளார்கள்.
கடந்த மாதம் கே.ஜி.எஃப். 2 திரைப்படம் வெளியான நிலையில் அந்த படத்தின் முன்பதிவுக்கும் இதேபோன்ற ஆர்வம் ரசிகர்கள் ஆர்வம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் விக்ரம் படத்திற்கும் அதே எதிர்பார்ப்பு நிலவுவதால் படம் வசூலை குவிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
விக்ரம் படம் வெளியாவதற்கு இன்னும் 10 நாட்கள் உள்ள நிலையில் முன்பதிவு சென்னை உள்பட தமிழ்நாட்டில் எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
விக்ரம் முன்பதிவு குறித்த அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் படங்களில் பீஸ்டிற்கு நிகராக முன்பதிவில் சாதனை படைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்…
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.