முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / தமிழகத்தில் 'பாகுபலி' படத்தின் வசூல் சாதனையை முறியடித்த விக்ரம் படம்!

தமிழகத்தில் 'பாகுபலி' படத்தின் வசூல் சாதனையை முறியடித்த விக்ரம் படம்!

விக்ரம் படத்தில் கமல்

விக்ரம் படத்தில் கமல்

மூன்றாவது வாரமாக வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் இப்படமானது, தற்போதுவரை உலக அளவில் 350 கோடியை வசூலித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

  • Last Updated :

கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்துள்ள 'விக்ரம்' திரைப்படம், தமிழகத்தில் 'பாகுபலி' படத்தின் வசூல் சாதனையை முறியடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கடந்த ஜுன் 3 ம் தேதி உலகம் முழுவதும் கமல்ஹாசன் நடிப்பில்  விக்ரம் வெளியாகி பிரமாண்ட வரவேற்பை பெற்று வருகிறது. கமலுடன் விஜய் சேதுபதி, பகத் பாசில், சிறப்பு தோற்றத்தில் சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைத்திருக்கும் இப்பட பாடல்கள் அனைத்துமே செம ஹிட். தற்போது படம் வசூலிலும் நல்ல வேட்டை நடத்தி வருகிறது.

இந்நிலையில் கமல் நடித்த படங்களிலேயே முதல் நாளில் மிக அதிகமான வசூலை விக்ரம் குவித்துள்ளது. தமிழ் நாட்டில் அதிக அளவுக்கு விக்ரம் படம் கலெக்சனை அள்ளியிருப்பதாக தகவல்கள் தெரிவித்தன.

இந்நிலையில் 'விக்ரம்' திரைப்படம், தமிழகத்தில் 'பாகுபலி' படத்தின் வசூல் சாதனையை முறியடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Also read... தந்தையர் தினத்தை முன்னிட்டு தனுஷ் வெளியிட்ட ‘திருச்சிற்றம்பலம்’ க்ளிம்ப்ஸ் வீடியோ!

விக்ரம் வெளியாகி 17 நாட்களை கடந்துவிட்ட நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் 150 கோடியை விக்ரம் வசூலித்துள்ளது. இதன் மூலம் 'பாகுபலி 2' படத்தின் மொத்த வசூலை 'விக்ரம்' முறியடித்துள்ளது.

மூன்றாவது வாரமாக வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் இப்படமானது, தற்போதுவரை உலக அளவில் 350 கோடியை வசூலித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Kamal Haasan