முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / 2 நாட்களில் 2 கோடி பார்வைகளைக் கடந்த விக்ரம் படத்தின் முதல் சிங்கிள்... ட்ரெண்டிங்கில் நம்பர் ஒன்

2 நாட்களில் 2 கோடி பார்வைகளைக் கடந்த விக்ரம் படத்தின் முதல் சிங்கிள்... ட்ரெண்டிங்கில் நம்பர் ஒன்

கடந்த பல ஆண்டுகளில் ஹிட்டாகாத அளவுக்கு கமலின் பாடல் தற்போது, வேற லெவலில் வைரல் ஆகி வருகிறது.

கடந்த பல ஆண்டுகளில் ஹிட்டாகாத அளவுக்கு கமலின் பாடல் தற்போது, வேற லெவலில் வைரல் ஆகி வருகிறது.

கடந்த பல ஆண்டுகளில் ஹிட்டாகாத அளவுக்கு கமலின் பாடல் தற்போது, வேற லெவலில் வைரல் ஆகி வருகிறது.

  • Last Updated :

கமல் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் படத்தின் முதல் சிங்கிள் 2 நாட்களில் 2 கோடி பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.

கமல் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் படத்திலிருந்து முதல் பாடல் கடந்த புதன் கிழமையன்று வெளியானது. நீண்ட நாட்களுக்கு பின்னர் மாஸ்ஸான பாடலை கமல் பாடியுள்ளதால் அவரது ரசிகர்கள் கொண்டாட்ட மன நிலையில் உள்ளனர். பாடலில் மத்திய அரசை விமர்சிக்கும் வரிகள் இடம்பெற்றுள்ள நிலையில் பாடல் தற்போது ஹிட்டாகி வருகிறது.

கமல் நடிக்கும் விக்ரம் படத்தை அவரது தீவிர ரசிகரும், தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனருமான லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். திரைக்கதை மற்றும் மேக்கிங்கில் மிரட்டக் கூடியவர் என்பதால் லோகேஷ் + கமலின் கூட்டணியின் விக்ரம் படத்தை சினிமா ரசிகர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.

இதையும் படிங்க - தளபதி 66 அப்டேட் : விஜய்யின் அம்மா கேரக்டரில் நடிப்பவர் இவர்தானா?

லோகேஷ், கமலை தவிர்த்து அனிருத், கே.ஜி.எஃப். ஸ்டன்ட் டைர்க்டர்கள் அன்பறிவு, பகத் பாசில், விஜய் சேதுபதி என தலைசிறந்த கலைஞர்களும் படத்தில் இணைந்திருப்பதால் இந்தப் படம் ப்ளாக் பஸ்டர் ஆகும் என்பதில் சந்தேகம் இல்லை.

இதையும் படிங்க - அடேங்கப்பா... சிம்பு அணிந்த கோட் விலை இத்தனை லட்சமா!

இந்நிலையில், பாடல் வெளியாகி 2 நாட்களில் 2 கோடி பார்வைகளை அதாவது 20 மில்லியன் பார்வைகளை விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான பத்தல பத்தல பாடல் தாண்டியுள்ளது.

இதேபோன்று யூடியூப் மியூசிக் கேட்டகேரி ட்ரெண்டிங்கில் பத்தல பத்தல பாடல் முதலிடத்தை பிடித்துள்ளது.

top videos

    கடந்த பல ஆண்டுகளில் ஹிட்டாகாத அளவுக்கு கமலின் பாடல் தற்போது, வேற லெவலில் வைரல் ஆகி வருகிறது.

    First published:

    Tags: Kamal Haasan