ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ரிலீஸுக்கு முன்னரே கோடிகளை அள்ளிய விக்ரம்… வசூலில் புதிய உச்சம் தொடும் என எதிர்பார்ப்பு

ரிலீஸுக்கு முன்னரே கோடிகளை அள்ளிய விக்ரம்… வசூலில் புதிய உச்சம் தொடும் என எதிர்பார்ப்பு

விக்ரம்

விக்ரம்

Vikram Movie Business : தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழியில் விக்ரம் வெளியாகவுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

கமல் நடிப்பில் வெளிவரவுள்ள விக்ரம் திரைப்படம் ரிலீஸுக்கு முன்னரே பல கோடி ரூபாய்க்கு பிஸ்னஸ் செய்துள்ளது. ரிலீஸுக்கு பின்னர் வசூலில் விக்ரம் புதிய உச்சத்தை தொடலாம் என்று சினிமா வர்த்தக நிபுணர்கள் கணித்துள்ளார்கள்.

கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படம் இன்னும் 2 நாட்களில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இதையொட்டி நேற்று முன்தினம் டிக்கெட் புக்கிங் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.

கமல், சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாசில் என ரசிகர்கள் மனம் கவர்ந்த ஹீரோக்கள் ஒரே படத்தில் இடம்பெற்றுள்ளனர். மேலும், மாநகரம், கைதி, மாஸ்டர் வெற்றிப் படங்களை அளித்த லோகேஷ் கனகராஜ் இதனை இயக்கியுள்ளதால், எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது.

திருக்கடையூர் கோயிலில் இளையராஜாவுக்கு சதாபிஷேகம் - பாரதிராஜா பங்கேற்பு! 

ரசிகர்களை விக்ரம் திருப்தி செய்தால், இந்த படத்தின் வசூல் தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க ஒன்றாக அமையும். இதற்கிடையே, படத்தின் புரொமோஷன் பணிகளில் கமல் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் ரிலீஸுக்கு முன்னரே விக்ரம் படம் ரூ. 200 கோடிக்கு வர்த்தகம் செய்துள்ளது. இதன் திரையரங்கு, சாட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமை ஒட்டுமொத்தமாக ரூ 200 கோடிக்கு விற்பனையாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க - உலகின் மிக உயரமான ஸ்க்ரீனில் வெளியாகும் விக்ரம் படத்தின் ட்ரெய்லர்… புரொமோஷனில் புதிய உச்சம்

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழியில் விக்ரம் வெளியாகவுள்ளது. தொடர் வெற்றிகளைக் கொடுத்த லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்கியுள்ளார். கமலுடன், மக்கள் அபிமான ஹீரோக்கள் நடித்துள்ளனர். இந்த காரணங்களால் விக்ரம் படத்தின் வர்த்தகம் உச்சத்திற்கு சென்றுள்ளது.

விக்ரம் படத்திற்கு இருக்கும் எதிர்பார்ப்பை பார்க்கும்போது, ரிலீஸுக்கு பின்னர் தியேட்டர் வசூலில் புதிய உச்சத்தை தொடலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Kamal Haasan, Vikram