Home /News /entertainment /

விக்ரம் படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியீடு… கவனம் ஈர்க்கும் கமல் போஸ்டர்

விக்ரம் படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியீடு… கவனம் ஈர்க்கும் கமல் போஸ்டர்

விக்ரம் படத்தின் புதிய போஸ்டர்

விக்ரம் படத்தின் புதிய போஸ்டர்

அடுத்ததாக விக்ரம் படத்திற்கான முன்பதிவு குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விக்ரம் படத்திற்கு சென்சார் சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள கமலின் புதிய போஸ்டர் கவனம் ஈர்த்து வருகிறது.

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில்  பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. படத்தின் பத்தல பத்தல பாட்டில் மத்திய அரசை விமர்சித்து வரிகள் இருப்பதாக சர்ச்சை ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து, படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. பத்தல பத்தல பாடலைத் தொடர்ந்து விக்ரம் படத்திலிருந்து போர்க்கண்ட சிங்கம் என்ற 2வது பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதையும் படிங்க - தமிழ் சினிமாவின் ’ஆல் இன் ஆல் அழகு ராஜா’ கவுண்டமணி பிறந்த நாள் ஸ்பெஷல்!

முதல் பாடல் ரசிகர்களை ஆட்டம் போட வைத்த நிலையில், இரண்டாவதாக வெளிவந்துள்ள போர்க்கண்ட சிங்கம், தங்களை கண்கலங்க வைப்பதாக ரசிகர்கள் கூறியுள்ளனர்.



அடுத்தடுத்து அப்டேட்டுகள் வந்து கொண்டிருப்பதால் விக்ரம் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு எப்போதும் உச்ச கட்டத்தில் இருக்கிறது.

இதையும் படிங்க.. அந்த வார்த்தை சொன்ன தாமரை.. கடுப்பானாரா ஆங்கர் பிரியங்கா? கொளுத்தி போடும் நெட்டிசன்கள்!

இந்நிலையில் அடுத்த கட்டமாக விக்ரம் படத்திற்கு சென்சார் சான்றிதழ் வெளியிடப்பட்டுள்ளது. இதில் யு/ஏ தணிக்கை சான்றிதழ் விக்ரம் படத்திற்கு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



இதுதொடர்பாக படக்குழுவினர் வெளியிட்டுள்ள புதிய போஸ்டர் அட்டகாசமாகவும், ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் அமைந்துள்ளது.

அடுத்ததாக விக்ரம் படத்திற்கான முன்பதிவு குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Published by:Musthak
First published:

Tags: Kamal Haasan, Vikram

அடுத்த செய்தி